Kathir News
Begin typing your search above and press return to search.

உங்க வீட்டுல வந்து இருக்கட்டுமா அமைச்சரே? - மின்வெட்டு பிரச்சினை குறித்து காரசாரமாக பேசிக்கொண்ட செந்தில் பாலாஜி, சீமான்

உங்க வீட்டுல வந்து இருக்கட்டுமா அமைச்சரே? - மின்வெட்டு பிரச்சினை குறித்து காரசாரமாக பேசிக்கொண்ட செந்தில் பாலாஜி, சீமான்
X

ThangaveluBy : Thangavelu

  |  9 May 2022 11:56 AM IST

சிங்கள் ரொம்பநாளா குடியிருக்கிற 'குடிசையில்' அண்ணன் தங்கிக்கொள்ள தயவு செய்து அனுமதி கொடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கலாய்த்துள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. சில மாவட்டங்களில் எந்த நேரத்திற்கு மின்சாரம் வருகிறது, போகிறது என்பது பொதுமக்களே குழம்பியுள்ளனர். தற்போது கோடை காலம் என்பதால் மின்சாரம் இல்லாமல் மக்கள் வீடுகளில் இருக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கும் பட்சத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பல கிராங்களில் நீடித்து வருகிறது.

இதற்கு மத்தியில் தி.மு.க. அரசு ஓராண்டு நிறைவு செய்துள்ளது. இதனை அக்கட்சியினர் தங்களுக்கு தாங்களே போஸ்டர் அடித்து ஒட்டி தங்களின் சாதனைகளை பாருங்கள் என்று தி.மு.க.வினர் இணையத்தில் பதிவிடுகின்றனர். அதே போன்று அவர்களை கலாய்க்கும் விதமாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு ட்வீட் செய்திருந்தார்.

அதாவது ஏப்பா சீமான்..

இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பார்த்தா எழவு கரண்ட் இல்லப்பா..

அது தான் பெரியம்மா திராவிட மாடல்..! என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் சொல்லும் விதமாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்தபோதும் தமிழ்நாடு மின்வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு உண்மையிலேயே மின்வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் சொல்லும் விதமாக சீமான் ட்வீட் செய்தார், அதில் மின்சாரத்துறை அமைச்சர் அன்புத்தம்பி செந்தில் பாலாஜி அவர்களுக்கு!

அண்ணனின் கடற்கரையோர வாடகை சொகுசு பங்களாவில் நீங்கள் வந்து குடியிருங்கள். நீங்கள் ரொம்பநாளா குடியிருக்கிற 'குடிசையில்' அண்ணன் தங்கிக்கொள்ள தயவு செய்து அனுமதி கொடுங்கள்! என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இணையத்தில் இவர்களின் ட்வீட் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source: Twiter

Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News