சென்னை மேயர் பிரியாவுக்கு தி.மு.க பிறப்பித்த திடீர் தடை!
By : Thangavelu
சமீபத்தில் அம்மா உணவம் பற்றி சென்னை மேயர் பிரியா பேசிய விவகாரம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவருக்கு தி.மு.க. தலைமை திடீர் தடை ஒன்றை பிறப்பித்துள்ளது.
சென்னை மாநகராட்சி தேர்தலில் 74வது வார்டில் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றவர் பிரியா. இவர் மேயராகவும் போட்டியின்றி தேர்வனார். அதே சமயம் துணை மேயராக தி.மு.க.வை சேர்ந்த மகேஷ்குமார் என்பவர் பொறுப்பேற்றார். ஆனால் ஆரம்பம் முதலே பிரியாவுக்கு மீடியா முன்பு பேச தெரியலை, ஏதாவது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார். அதனை துணை மேயர் கவனித்து சரிசெய்து வந்தார்.
இதற்கிடையில் மேயர் தலைமையில் நடந்த மாநகராட்சி கூட்டத்தை வழிநடத்த வேண்டிய பிரியா, அந்த பொறுப்பை துணை மேயரிடம் ஒப்படைத்தார். இது ஆளுங்கட்சி மட்டுமின்றி எதிர்கட்சிகளிடையும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் எதிர்ப்பு அதிகரிக்க தனது பொறுப்புகளை தானே செய்வதற்கு முன்வந்தார் மேயர் பிரியா. இதற்கு மத்தியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மேயர் பிரியா கலந்து கொண்டு பேசும்போது, அ.தி.மு.க. ஆட்சியில் துவங்கப்பட்ட அம்மா உணவகத்தை பெரும்தன்மையுடன் நடத்தி வருகின்றோம். பல இடங்களில் மக்கள் வருகை இன்றி அம்மா உணவகம் பூட்டப்பட்டுள்ளது என்றார்.
சென்னை மேயர் பிரியாவுக்கு தி.மு.க., திடீர் கடிவாளம் https://t.co/Z7BNV1NXBT pic.twitter.com/I1osBGVLdE
— Dinamalar (@dinamalarweb) May 18, 2022
இதனால் அதிர்ச்சியடைந்த துணை மேயர் மகேஷ்குமார் மேயர் பேச்சை உடனடியாக இடைமறித்து, அதாவது ஒரு அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது என்று பேசி சமாளித்தார். ஆனால் மேயர் பிரியா பேசியது சமூக வலைதளத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது. அம்மா உணவகம் லாபம் நோக்கத்திற்கு ஆரம்பிக்கப்படவில்லை, ஏழைகள் சாப்பிடவே ஆரம்பிக்கப்பட்டது என்ற விமர்சனம் பரவலாக பகிரப்பட்டது.
மேலும், மேயரின் பேச்சுக்கு அ.தி.மு.க., தி.மு.க. அரசு மீது குற்றம்சாட்டியது. பிரியாவின் பேச்சு அரசுக்கு மிகப்பெரிய கெட்டப்பெயரை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக தலைமைக்கு புகார் சென்றது. இதனால் மறு அறிவிப்பு வருகின்ற வரையில் செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்க்கும்படி மேயர் பிரியாவுக்கு தி.மு.க. தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Source, Image Courtesy:Dinamalar