ஸ்டாலினுக்கு அடுத்து முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் ரெடியாக இருக்கிறார்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் குதூகலம்
By : Dhivakar
"மு.க ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்க தயாராக உள்ளார்" என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
தீவிர குடும்ப அரசியலால், இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியை சந்தித்து, திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, இந்திய மக்களும் குடும்ப அரசியலின் விளைவு என்ன விதமாக இருக்கும் என்று இலங்கையிலுள்ள நிலையைக் கண்டு புரிந்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவை ஒட்டி, பல இடங்களில் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் வரிசையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பங்கேற்றார். அப்போது பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் " கடந்த 10 வருடம் தமிழகத்தில் கேடுகெட்ட ஆட்சி நடைபெற்றுவிட்டது. நமது ஆட்சி நல்லாட்சி நமது முதலமைச்சர் நல்ல முதலமைச்சர். இன்னும் இருபது ஆண்டுகளுக்கும் மு.க ஸ்டாலின் தான் முதலமைச்சர். அவருக்குப் பின்பு உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதற்கு தயாராக உள்ளார். வாரிசாக இருந்தாலும் இருவரும் சிரமப்பட்டுதான் இந்த இடத்திற்கு வந்துள்ளனர். " என்று அமைச்சர் பேசினார்.