Kathir News
Begin typing your search above and press return to search.

பெட்ரோல் விலை குறைக்கவிட்டால் கோட்டையை முற்றுகையிடுவோம் - வானதி சீனிவாசன்

பெட்ரோல் விலை குறைக்கவிட்டால் கோட்டையை முற்றுகையிடுவோம் - வானதி சீனிவாசன்
X

ThangaveluBy : Thangavelu

  |  26 May 2022 10:44 AM GMT

தி.மு.க. அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை எனில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், மத்திய அரசு கடந்த நவம்பரில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது. தற்போது மேலும், மக்களின் கஷ்டத்தை உணர்ந்து கொண்டு மறுபடியும் விலையை குறைத்து உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு கடந்த நவம்பர் முதலே பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்க வேண்டும் என்று பா.ஜ.க. கோரிக்கை வைத்தது. இதுவரையில் தி.மு.க. அரசு செவி சாய்க்காமல் உள்ளது.

தற்போதைய நிலையில் மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.8, டீசலுக்கு 6 ரூபாயும் குறைத்துள்ளது. காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 என குறைத்துள்ளது. இதனை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி பெட்ரோல், டீசல், காஸ் மீதான விலையை குறைத்து வருகிறது. ஆனால் தி.மு.க. நிதியமைச்சர் விலையை குறைக்க முடியாது என்று அடம்பிடித்து வருகின்றார். உடனடியாக விலையை குறைக்கா விட்டால் கோட்டையை பா.ஜ.க. சார்பில் முற்றுகையிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinamalar

Image Courtesy: The Economic Times

Next Story
கதிர் தொகுப்பு
Trending News