வேலூர் வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி - பா.ஜ.க. அதிரடி!
By : Thangavelu
பிரதமர் மோடியின் பா.ஜ.க. ஆட்சி 9வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் திட்டங்கள் சாதனை விளக்கம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு கிரீன் சர்க்கிள் அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
அதில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி கூறும்போது: மத்திய அரசிடம் தி.மு.க. அரசு ஒரு மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. ஆனால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களின் மக்களும் பயன்பெறுகின்ற வகையிலேயே பிரதமர் மோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தேர்தல் வாக்குறுதிகளை ஒரு சதவீதம் கூட தி.மு.க.வால் நிறைவேற்ற முடியவில்லை. மதுவினால் விதவைகள் அதிகம் அதிகம் உள்ள மாநிலம் என கனிமொழி பேசினார். அந்த நிலை இப்போது குறைந்துள்ளதா? டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதா? மேலும் விளைநிலங்களில் சிவப்பு கம்பளம் விரித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். இதுதான் திராவிட மாடலா?
வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.300 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதனையொட்டி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அரசு முறையாக பயன்படுத்தாமல் விட்டதால், அந்த நிதி மீண்டும் மத்திய அரசிடமே சென்று விட்டது. சமீபத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது பிரதமர் மோடி பேசுகையில் மியூட் செய்து, எம்.பி. கதிர் ஆனந்த் புறக்கணித்தார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும், வேலூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற உள்ளார். அப்போது எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க கறுப்புக்கொடி காட்டுவோம். மேலும், வேலூரில் போக்குவரத்து நெரிசல் குறைக்க பாலங்கள் கட்டுவதற்கு ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டது. அதை நடைமுறைப்படுத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். புதிய பேருந்து நிலையத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source:
Image Courtesy: The New Indian Express