Kathir News
Begin typing your search above and press return to search.

காமராஜர் உருவாக்கிய குளங்களை தூர்வார தி.மு.க. தயங்குகிறது - அண்ணாமலை!

காமராஜர் உருவாக்கிய குளங்களை தூர்வார தி.மு.க. தயங்குகிறது - அண்ணாமலை!
X

ThangaveluBy : Thangavelu

  |  7 Jun 2022 7:35 AM GMT

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் உருவாக்கிய குளங்களை தூர்வாருவதற்கு கூட தி.மு.க. அரசு தயங்குவதாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் இணையும் விழாவில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள விவசாயிகளுக்காக உள்ள ஒரே கட்சியாக பா.ஜ.க. மட்டுமே செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் ஒவ்வொரு திட்டமும் விவசாயிகளின் நலன் சார்ந்து அமைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2016ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் மண் வள அட்டை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 11 கோடி விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது எந்த விவசாயி மண்வள அட்டை பெறவில்லையோ அவர்கள் கட்சியினரிடம் சொல்லி இலவசமாக பெறலாம். மண்ணில் உள்ள வளம் மற்றும் என்ன மாதிரியான விவசாயம் மேற்கொள்ளலாம் என்பது அனைத்து அதில் இடம் பெற்றிருக்கும்.

மேலும், ராமநாதபுரம் மாவட்டம் நீர் பற்றாக்குறை இருக்கின்ற மாவட்டம். காமராஜர் பல அணைகளை கட்டினார். குளம், கிணறுகளை தோண்டினார். ஆனால் அதற்கு பின்னர் வந்த ஆட்சியாளர்கள் தற்போது உள்ள தி.மு.க. ஆட்சியாளர்கள் எதுவுமே செய்யவில்லை. அவர் உருவாக்கிய ஒரு குளத்தை கூட தூர்வாருவதற்கு கூட இவர்களால் முடியவில்லை. குளத்தை தூர்வாருதற்கான செலவை மத்திய அரசு 100 சதவீத பணத்தை கொடுத்தாலும் தி.மு.க. அரசு தயாராக இல்லை. இதனால் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் உள்ளது. இதற்கு என்று சொட்டு நீர் பாசனத்திற்கான பைப் பிரதமர் மோடி மானியத்தில் கொடுத்துள்ளார். ஆனால் ரியல் எஸ்டேட் செய்பவர்கள்தான் தமிழகத்தில் பணக்காரர்கள். அதே நேரத்தில் விவசாயி பணக்காரனாக இருப்பதில்லை. இதனை மாற்றுவதற்கு பிரதமர் மோடி ஒவ்வொரு விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கி வருகிறார். இதனால் தமிழகத்தில் மட்டும் சுமார் 38 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News