Kathir News
Begin typing your search above and press return to search.

'கையை வெட்டிவிடுவேன்' என அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன்!

கையை வெட்டிவிடுவேன் என அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன்!
X

ThangaveluBy : Thangavelu

  |  11 Jun 2022 1:47 PM IST

குறைபிரசவத்தில் பிறந்தவர் கரங்கள் உன்னிடத்தில் இருக்காது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை மிகவும் தரக்குறைவாக தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., கலைராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

தி.மு.க. அரசின் ஊழல்கள் பற்றி சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆதாரங்களுடன் வெளியிட்டார். இதனை தாங்கிக்கொள்ள முடியாத தி.மு.க. தலைமை அவர்களின் நிர்வாகிகளை வைத்து அண்ணாமலையை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறது.

அதன்படி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., கலைராஜன், அண்ணாமலை குறித்து மிகவும் தவறாக பேசும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அண்ணாமலை குறைபிரசவத்தில் பிறந்த குதர்க்கவாதி, அரைவேக்காடு, அந்த அரைவேக்காடு காவல்துறை அதிகாரியாக கர்நாடகத்தில் பணியாற்றினார். இங்கே தமிழகத்திற்கு வந்து தினமும் ஏதோ பேசி வருகின்றார்.

மேலும், ஆதீனத்தின் மீது தி.மு.க. கைவைத்தால் சும்மா இருக்க மாட்டேன் என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் நீட்டுவதற்கு கரங்கள் இருக்காது. நான் இங்கே எச்சரிக்கை செய்கிறேன் என்று மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் பேசியுள்ளார். இவரது பேச்சுக்களுக்கு பா.ஜ.க. கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

Source, Image Courtesy: Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News