'கிறிஸ்தவரை நிறுத்துவாங்கனு பார்த்தேன், இப்படி ஏமாத்திட்டாங்களே!' - திருமாவளவனின் புலம்பல்
By : Thangavelu
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போன்று காங்கிரஸ் கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஒரு கிறிஸ்தவரை நிறுத்த வேண்டும் என்று கடந்த ஒரு வாரமாகவே கூறிவந்த நிலையில், அவரது கோரிக்கை தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 2.30 மணியளவில் புதுதில்லியில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் விசிக சார்பில்
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 21, 2022
திரு. சரத்பவார் அவர்களிடம் இம்மனு வழங்கப்பட்டது. கிறித்தவர் ஒருவரைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழிய கோரினோம். எனினும்,
திரு.யஷ்வந்த் சின்கா பொதுவேட்பாளர் என முடிவெடுக்கப்பட்டது. pic.twitter.com/ddylVjkHyX
இது தொடர்பாக அவர் வெளியிட்டள்ள ட்விட்டர் பதிவில், இன்று மாலை 2.30 மணியளவில் புதுதில்லியில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் விசிக சார்பில் திரு. சரத்பவார் அவர்களிடம் இம்மனு வழங்கப்பட்டது. கிறித்தவர் ஒருவரைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழிய கோரினோம். எனினும், திரு.யஷ்வந்த் சின்கா பொதுவேட்பாளர் என முடிவெடுக்கப்பட்டது. இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source: Twitter
Image Courtesy: Zee News