Kathir News
Begin typing your search above and press return to search.

மனு கொடுக்க வந்த நரிக்குறவ மக்களை இருக்கை இருந்தும் தரையில் அமரச் செய்த அவலம்: அண்ணாமலை கண்டனம்!

மனு கொடுக்க வந்த நரிக்குறவ மக்களை இருக்கை இருந்தும் தரையில் அமரச் செய்த அவலம்: அண்ணாமலை கண்டனம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  28 Jun 2022 3:55 PM IST

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்ற குறைத்தீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த நரிக்குறவ மக்களை இருக்கை இருந்தும் தரையில் அமர வைத்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வீடியோ ஒன்றை இணைத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சிவங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் வாரக்குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த நரிக்குறவ சமூதாயத்தைச் சேர்ந்த சுமார் 50 சகோதர, சகோதரிகளை இருக்கை இருந்தும் தரையில் அமரச் செய்த அவலம் நிகழ்ந்துள்ளது.

சமூக நீதி என்பது பெயரளவில் விளம்பரத்திற்காக இருந்தால் மட்டும் போதாது, அது செயல்பாட்டிலும் இருக்க வேண்டும் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நரிக்குறவர்களின் நீண்டகால கோரிக்கையைத் பா.ஜ.க. முன்னெடுத்துச் செல்லும். இவ்வாறு அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News