சில பிராமணர்கள் சாஃப்ட் கிடையாது: ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த சுப்ரமணிய சுவாமி!
By : Thangavelu
தி.மு.க. செய்தித் தொடர்பாளருக்கு எதிராக குற்றவழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கக்கோரி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி எம்.பி., கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தி.மு.க. செய்தித்தொடர்பாளர் ராஜீவ்காந்தி மீதான குற்றப்புகாரை இந்த கடிதத்துடன் இணைத்துள்ளேன். புகாரை தாக்கல் செய்ய நடைமுறை பிரிவு 196ன் படி உங்கள் அனுமதி தேவைப்படுகிறது. இணைக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட ராஜீவ்காந்தி இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றங்களை செய்திருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.
கடந்த ஜூன் 3ம் தேதி தமிழ் பிராமணர்களை இனபடுகொலை செய்ய வேண்டும் என்று பொதுவெளியான ட்விட்டர் மூலம் அவர் அழைப்பு விடுத்துள்ளார். சுப்ரமணியன் சுவாமி மன்மோகன் சிங் ஆகியோர்களிடையே நடைபெற்ற உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்பை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எதற்கு எல்லாம் குற்றவழக்கு பதிவு செய்யலாம் என அந்த தீர்ப்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி நியாயத்தின் அடிப்படையிலும் அரசியல் அமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
"சில பிராமணர்கள் சாஃப்ட் இல்ல" முதல்வருக்கு சுப்ரமணியன் சுவாமி எச்சரிக்கை https://t.co/wupaoCQKa2 | #subramanianswamy #mkstalin #rnravi #dmk #bjp pic.twitter.com/2N59rfO2IT
— ABP Nadu (@abpnadu) June 30, 2022
மேலும், பொது அமைதியை கெடுக்கும் வகையில் குற்றம்சாட்டப்பட்டவர் பல கொடூற குற்றங்களை செய்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்ட சுப்ரமணியன் சுவாமி பிராமணர்களிலேயே கடினமானவர்களும் இருக்கிறார்கள் என்பதை ராஜீவ்காந்திக்கு தெரிவியுங்கள் ஸ்டாலின் அவர்களே, குரூமூர்த்தி போன்றவர்கள் கோழைகள் அல்ல எனவும் பதிவிட்டுள்ளார்.
Source: Abp
Image Courtesy: Sunday Guardian