"தனித்தமிழ்நாடு கேட்க வைத்து விடாதீர்கள்!" - முதல்வர் ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டே ஆ ராசா பகிரங்க பேச்சு!

By : Dhivakar
நாமக்கல்: "நான் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், எங்களை தனித்தமிழ்நாடு கேட்கும் நிலைக்கு எங்களை ஆளாக்காதீர்கள்" என்று முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசா பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கலில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டே, பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசா பேசியதாவது : முதன் முதலில் பெரியார் தான் இந்தியாவிலிருந்து 'தனித் தமிழ்நாடு' என்ற கோஷத்தை எழுப்பினார். பின்னர் ஜனநாயகம் மற்றும் இந்திய ஒற்றுமை கருதி அந்த கோரிக்கையை ஒதுக்கி வைத்துவிட்டனர். நான் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், எங்களை தனித்தமிழ்நாடு கேட்கும் நிலைக்கு எங்களை ஆளாக்காதீர்கள். தயவு செய்து மாநில சுயாட்சி கொடுங்கள்.
இவரது இந்த சர்ச்சை பேச்சு அரசியல் வட்டாரத்தில் பூகம்பத்தை கெளப்பியுள்ள்ளது.
