Kathir News
Begin typing your search above and press return to search.

'உங்க வீட்டு பிள்ளையா நினச்சு மன்னிச்சுடுங்க' - அழகான பெண்கள் பற்றி பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ மன்னிப்பு கேட்டார்!

உங்க வீட்டு பிள்ளையா நினச்சு மன்னிச்சுடுங்க - அழகான பெண்கள் பற்றி பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ மன்னிப்பு கேட்டார்!

ThangaveluBy : Thangavelu

  |  5 July 2022 9:40 AM GMT

பெண்கள் மிகவும் அழகாக இருந்தால் மட்டுமே அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்று வேடசந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., காந்திராஜன் பேசியிருந்த நிலையில் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

திண்டுக்கல்லில் தனியார் கல்லூரியில், கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க. எம்.எல்.ஏ., காந்திராஜன் கலந்து கொண்டு பேசியதாவது: நிறுவனங்கள் மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களை பார்த்து வேலை கொடுப்பதில்லை. கல்வி தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சோதனை செய்தாலும், சரளமாக ஆங்கிலத்திலும் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் பெண்களாக இருந்தால் மிகவும் அழகான முறையில் இருக்க வேண்டும் அப்போதுதான் அதிகமான சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்று பேசியிருந்தார்.

இவரது பேச்சுக்கு பா.ஜ.க. மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்திருந்தார். பெண்களை மதிக்காத தி.மு.க. கட்சி எனவும் சாடினார்.

இந்நிலையில், பெண்கள் அழகு பற்றி பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ., காந்திராஜன் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். நான் பேசியது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது. எங்க ஆட்சிக்கு கெட்டப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News