அடுத்தபடியாக தாக்கரே குடும்பத்திடமிருந்து சிவசேனா கட்சியும் பறிபோகிறதா? - பா.ஜ.க மாஸ்டர் பிளான்!
By : Thangavelu
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் புதிய சபாநாயகரை அங்கீகரித்திருப்பதால் உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தை அனுகியுள்ளது. சிவசேனாவில் நடப்பது பற்றி பார்ப்போம், மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சி அமைத்துள்ளனர். இதனால் அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தவ் தாக்கரே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மாநில சட்டப்பேரவை சபாநாயகர் பதவி பா.ஜ.க. வசம் இருக்கிறது. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற ஷிண்டே, சிவசேனாவை வசப்படுத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அணியில் இருக்கும் அவரது மகன் மற்றும் உத்தவ் தாக்கரே உட்பட 15 எம்.எம்.எல்.ஏ.க்களும் ஷிண்டேவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஷிண்டே நியமனம் செய்த சிவசேனா கொரடா, சபாநாயகரை நாடியிருக்கிறார்.
ஆனால் ஷிண்டே தரப்பு நியமனம் செய்த கொரடாவை அங்கீகரித்திருப்பதற்கு உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. இந்த வழக்கு ஜூலை 11ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினமே ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏ.க்களை தாக்கரே தரப்பு தகுதி நீக்கம் செய்ததற்கு எதிரான வழக்கு விசாரணையும், ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டதற்கு எதிரான வழக்கும் விசாரணைக்கு வருகிறது.
தாக்கரே குடும்பத்திடமிருந்து பறிபோகும் சிவசேனா?... பாஜக - ஷிண்டே மாஸ்டர் பிளான்#uddhavthackeray #shivsena #bjp https://t.co/LEpmyJ5mzs
— Thanthi TV (@ThanthiTV) July 5, 2022
இவ்வாறு கட்சியின் இரு தரப்பும் மோதிக்கொள்ளும் நிலையில் கட்சி யாருக்கு வசமாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே ஏற்கனவே 39 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை கொண்டிருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக உத்தவ் அணியில் இருந்து மற்றொரு எம்.எல்.ஏ., ஷிண்டே அணிக்கு தாவியிருப்பதால் அவர் வசம் 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
3ல் ஒரு பங்கு எம்.எல்.ஏ.க்களை வைத்திருப்பதால் ஷிண்டே தரப்பு தகுதி நீக்கத்தில் தப்பிக்க வாய்ப்பு இருந்தாலும் கட்சி ஷிண்டே தரப்புக்கு வசமாகிவிடாது. இதில் கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு முக்கியம் என்பது பார்க்கப்படும். சிவசேனா தொண்டர்களே தலைமையை தீர்மானிக்கும் நிலையில் இந்த விவகாரம் தேர்தல் ஆணையம் செல்லும். பின்னர் தேர்தல் ஆணையம் ஆராய்ந்து முடிவு எடுக்கும். அதன் பின்னர் விவகாரம் உச்சநீதிமன்றம் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அந்த சூழலில் உச்சநீதிமன்றமே இறுதி முடிவை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அரசியல் ஆய்வாளர்கள் கூறும்போது, இப்போதைக்கு கட்சியில் தாக்கரேவுக்கு அதிகம் ஆதரவு உள்ளது. ஷிண்டேவுடன் முதலமைச்சர் பொறுப்பை கொடுத்துவிட்டு தேவேந்தர் பட்னாவிஷ் துணை முதலமைச்சர் ஆனதிலும் அரசியல் இருக்கிறது என கூறும் அவர்கள், சிவசேனாவை ஷிண்டே வசமாக வேண்டும் என பா.ஜ.க. விரும்புகிறது. நீண்டகாலம் ஷிண்டே முதலமைச்சராக தொடரும் பட்சத்தில் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. பக்கமும் சாய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே நடப்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளனர்.
Source: Thanthi Tv
Image Courtesy: The Quint