ஆட்சி பறிபோன நிலையில் ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்கும் உத்தவ் தாக்கரே!
By : Thangavelu
ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்முவை ஆதரிப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் உத்தவ் தாக்கரே. இவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40க்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். இதன் பின்னர் அவர்கள் அனைவரும் கவுகாத்தியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து மகாராஷ்டிரா அரசை கவிழ்த்தனர். அதனை தொடர்ந்து பா.ஜ., ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். முன்னாள் முதலமைச்சராக இருந்த பட்னாவிஸ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், விரைவில் ஜனாதிபதி தேர்தல் வர உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிட உள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட உள்ளார்.
தற்போது நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிப்பதா அல்லது திரவுபதி முர்முவை ஆதரிப்பதா என்று சிவசேனா குழப்பத்தில் உள்ளார். இதற்கிடையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நடத்திய ஆலோசனையில் பெரும்பாலான எம்.பி.க்கள் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதற்கு முடிவு செய்துள்ளனர். இதனால் பதறிப்போன உத்தவ் தாக்கரே ஏற்கனவே எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டேவுடன் சென்றுவிட்டனர், தற்போது எம்.பி.க்களும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரவுபதி முர்முவை ஆதரிப்பதற்கு கூறியுள்ளதை உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்ட பின்னர் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவை ஆதரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar