Kathir News
Begin typing your search above and press return to search.

இலங்கை அதிபர் கோத்தபய இந்தியா வருவதை சாதுர்யமாக தடுத்து நிறுத்திய அண்ணாமலை

இலங்கை அதிபர் கோத்தபய இந்தியா வருவதை சாதுர்யமாக தடுத்து நிறுத்திய அண்ணாமலை

ThangaveluBy : Thangavelu

  |  18 July 2022 10:52 AM GMT

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே அந்நாட்டு மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து தனது உயிரை காப்பாற்றுவதற்காக மாலத்தீவு வழியாக சிங்கப்பூருக்கு தப்பியோடினார். அவர் இந்தியாவுக்குதான் தப்பி வருவதற்கு முயற்சி செய்தார். அதனை தடுத்தது யார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இலங்கை தமிழர் பிரச்னையில் பிற இயக்கங்களை விட, சமீபகாலமாக தமிழக பா.ஜ.க., மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. பல்வேறு மறைமுகமான வேலைகளை செய்து வருகிறது. போராட்டங்கள் நடந்த சமயத்தில்கூட தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை இலங்கை சென்று திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு சென்ற அண்ணாமலை தமிழக மக்களை சந்தித்து பல்வேறு உதவிகளை செய்தார். தமிழக பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாற்றினார். மேலும், இலங்கையில் தான் சந்தித்த நபர்கள், அவர்களின் கருத்துக்கள், தமிழர் நலனுக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்று நீண்ட அறிக்கை ஒன்றை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பினார்.

இந்நிலையில், இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். முதலில் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இலங்கையில் தலைமறைவான வாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

அவரை தொடர்ந்து அவரது சகோதரர் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் அவரது அலுவலகத்தை மக்கள் சிறைப்பிடிக்க வருவதை அறிந்த அவரும் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். அங்கிருந்து மாலத்தீவுக்கு சென்று சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்தார். அவர் இலங்கையை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புகுவதற்கு திட்டமிட்ட கோத்தபய முடிவு செய்திருந்தார். அவர் ஏற்கனவே அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தவர். இலங்கையில் அதிபர் பொறுப்பேற்கும் முன்னரே அதை ரத்து செய்தார்.

இருந்தபோதிலும், பழைய குடியுரிமையை கூறி, அமெரிக்காவுக்கு செல்வதற்கு தூதரகத்தை அணுகினார். ஆனால் அமெரிக்க தூதரக அதிகாரிகள் கொடுக்க மறுத்துவிட்டனர்.

இதனை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறையில் உள்ள தனது நண்பர்கள் மூலமாக இந்தியாவுக்குள் தஞ்சம் புகுவதற்கு முயற்சி செய்தார். இதற்கு என்று யு.எல்.229 என்ற விமானத்தை கோத்தபய தேர்வு செய்தார். இந்த விமானம் இலங்கையில் இருந்து குவைத் நாட்டுக்கு செல்லக் கூடியது. கொச்சி வழியாக செல்லும், அந்த விமானத்தில் பயணித்து, கொச்சியில் இறங்கி விடுவது என்பது கோத்தபயவின் திட்டமாகும். ஆனால் அது சரிபட்டு வராது என்று இந்திய அரசு கோத்தபயவிடம் கூறியுள்ளது.

அதனை தொடர்ந்துதான் கோத்தபய மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் சென்றார். இந்தியாவுக்குள் கோத்தபயவை அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசு வழிலாக தடை போட்டவர் தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏராளமான இலங்கை தமிழர்கள் ராஜபக்சே அரசால் கொல்லப்பட்டனர். அதற்காக, தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்கள், ராஜபக்சே குடும்பத்தினர் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை பிரதமர் மோடி செய்து வருகிறார். இதனால் தமிழர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக உளளனர்.

மேலும், அண்ணாமலை இலங்கை பயணத்திற்கு பின்னர் பா.ஜ.க.வுக்கு பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த சமயத்தில் இலங்கை அதிபர் இந்தியாவில் தஞ்சம் புகுவதற்கு நேரிட்டால் தமிழர்களிடையே கோபத்தை சம்பாதிக்க நேரிடும். இதனால்தான் மத்திய அரசுக்கு அண்ணாமலை அழுத்தம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து ராஜபக்சே குடும்பத்தினருக்கு மத்திய அரசு ஆதரவு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News