விமானத்தில் பயணியின் உயிரை காப்பாற்றிய ஆளுநர் தமிழிசை
By : Thangavelu
டெல்லியில் இருந்து தெலங்கானா மாநிலம், ஐதராபாத்திற்கு சென்ற விமானத்தில் பயணி ஒருவர் மயக்கம் அடைந்தார். அவரை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.
டெல்லியில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று ஐதராபாத்துக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் திடீரென்று மயக்கம் அடைந்தார். அப்போது விமான உதவியாளர்கள் உதவி கேட்டனர். மருத்துவர்கள் யாராவது இருந்தால் பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முன்வாருங்கள் என்றனர்.
விமானத்தில் பயணிக்கு மயக்கம் மேற்பட்ட நிலையில் களத்தில் இறங்கிய அக்கா @DrTamilisaiGuv பயணிக்கு முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றினார்...@DrTamilisaiGuv உங்கள் எளிமையான அணுகுமுறை என்றும் மக்கள் மறக்க மாட்டார்கள் 🙏 pic.twitter.com/bQAtAq4Rzv
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) July 23, 2022
இதனையடுத்து அந்த விமானத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்தார். அவர் ஒரு மருத்துவர் என்பதால் பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினார். இதனால் அவரது சேவைக்கு பயணிகள் கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பா.ஜ.க., நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல் குமார் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளதாவது: விமானத்தில் பயணிக்கு மயக்கம் அடைந்த நிலையில், களத்தில் இறங்கிய அக்கா டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பயணிக்கு முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றினார். உங்களின் எளிமையான அணுகுமுறை என்று மக்கள் மறக்க மாட்டார்கள். இவ்வாறு சி.டி.ஆர்.நிர்மல்குமார் பதிவிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twitter