கொங்குமண்டல விவசாயிகளிடம் நம்பிக்கை அளித்து மோசம் செய்த அமைச்சர் சாமிநாதன்!
By : Thangavelu
திருப்பூர் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் விழயாக உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நிறைவுபெற போகிறது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்த மனுவில் கூறியதாவது: தேர்தல் நேரத்தில் விவசாய நிலங்கள் வழியாக செல்லாது என்று தற்போதைய அமைச்சர், காங்கேயம் எம்.எல்.ஏ., சாமிநாதன் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாராபுரம் ராசிபாளையம் முதல் தருமபுரி மாவட்டம் பாலவாடி வரை விவசாய நிலங்கள் வழியாக அமைக்கும் பணி உயர்மின் கோபுரம் பணிகள் நிறைவுபெற போகிறது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் இத்திட்டம் விவசாயி நலனுக்கு எதிரானது மற்றும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் விவசாய நிலங்கள் வழியாக செல்லாது என்று தற்போதைய செய்தித்துறை அமைச்சரும், காங்கேயம் எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2021, 22ம் ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம், ஊதியூர், தாராபுரம் பகுதிகளில் விவசாயிகள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். இது குறித்து தாசில்தாரிடம் பலமுறை முறையிட்டனர். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது அமைச்சர் சாமிநாதன் உட்பட அனைத்து திருப்பூர் மாவட்ட தி.மு.க., தலைவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டம் வாபஸ் பெறப்படும் என்று விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்து இன்றைய அமைச்சர் காங்கேயம் எம்.எல்.ஏ., சாமிநாதனும், தாராபுரம் எம்.எல்.ஏ., கயல்விழியும் தேர்தலில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மற்றும் காங்கேயம் தாலுக்காவில் ராசிபாளையம், நொச்சிபாளையம், வானவராய நல்லூர், ஆறுதொழுவு, வீரணம்பாளையம், பாப்பினி, நத்தக்காடையூர் வழியாக இந்த உயர்மின் கோபுரம் செல்கிறது. இன்று திட்டத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைய உள்ளன. கோபுரங்கள் எழுப்பப்பட்டன, கம்பிகள் மட்டுமே இணைக்கப்பட வேண்டும்.
விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மிகக் குறைவான இழப்பீடு வழங்கப்படுகிறது. மின்சாரம் செல்லும் பாதையில் உள்ள தென்னை மரங்களை வெட்டி ஒரு மரத்திற்கு 25,000 ஆயிரம் வழங்கப்படுகிறது. நில உரிமையாளர்களுக்கு, மாதந்தோறும் வாடகை வழங்கக் கோரிய விவசாயிகளின் கோரிக்கையையும் விவசாயிகள் விரோத தி.மு.க., அரசு நிராகரித்துவிட்டது.
கடந்த ஆட்சியில் தி.மு.க., ஆதரித்த விவசாயிகள் போராட்டத்தின் முக்கியமான கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. திட்டப்பாதையில் உள்ள வீடு, கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் கட்டுமானங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. மின்கம்பிகள் வழியாக அதிக மின்னழுத்த மின்னோட்டம் செல்வதால் பெரும்பாலான விவசாய பயிர்களுக்கும் தென்னை மரங்களின் வளர்ச்சிக்கும் நிலம் தகுதியற்றதாகிறது. மேலும், காங்கேயம், தாராபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில், தென்னந்தோப்பு மிகவும் பொதுவானது. இந்த திட்டத்தால் நிலத்தின் மதிப்பு வெகுவாக குறையும். மின்கம்பி மேலே செல்வதால் இந்த நிலத்தில் எந்த கட்டுமானமும் செய்ய முடியாது.
கடந்த ஆட்சியின் போது, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் இன்னும் திரும்பபெறவில்லை. இதனால் தி.மு.க., அமைச்சர்கள் மீதும், அவர்களின் வார்த்தைகள் மீதும் கொங்கு மண்டல விவசாயிகள் இழந்துள்ளனர்.