Kathir News
Begin typing your search above and press return to search.

கையில் என்னப்பா காயம்? பட்டமளிப்பு விழாவில் மாணவரிடம் உரிமையாக விசாரித்த பிரதமர்! என்ன நடந்தது?

கையில் என்னப்பா காயம்? பட்டமளிப்பு விழாவில் மாணவரிடம் உரிமையாக விசாரித்த பிரதமர்! என்ன நடந்தது?

DhivakarBy : Dhivakar

  |  30 July 2022 5:59 AM GMT

சென்னை: நேற்று(29-07-2022) நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், கையில் காயத்துடன் தங்கப் பதக்கம் பெற வந்த மாணவரிடம், பிரதமர் நலம் விசாரித்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.


சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா வெகுவிமரிசையாக நடந்தது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழக ஆளுநர் R.N ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர்.


விழாவில் மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி பிரதமர் நரேந்திர மோடி கௌரவித்தார். அப்போது ஒரு மாணவர் கையில் காயத்துடன் பிரதமரிடம் பதக்கம் பெற வந்தார். அப்போது பிரதமர் அந்த மாணவரிடம் "கையில் என்ன காயம்?" என்று உரிமையுடன் விசாரித்துள்ளார்.


இதுகுறித்து அம்மாணவன் காணொளி ஒன்றில் பேசுகையில், "என்னுடைய பெயர் வெங்கடகிருஷ்ணன் கடலூரைச் சேர்ந்தவன். நான் B.Tech மருந்து தொழில்நுட்பத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளேன். பிரதமர் கையில் பதக்கத்தை வாங்கியது மிக்க மகிழ்ச்சி. என் கையில் காயத்தை பார்த்துவிட்டு " what happened? (என்ன நடந்தது?)" என்று பிரதமர் என்னிடம் கேட்டார். "Injury (சிறிது காயம் ஏற்பட்டுவிட்டது)" என்று நான் கூறினேன். அதற்கு"Take Care (நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்)" என்று கூறினார்.


இக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News