லண்டனுக்கு சிலை திறந்து வைக்க போன தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் - திரும்பி வர மனமின்றி இன்ப சுற்றுலா!

முல்லை பெரியாறு அணையை கட்டியவர் கர்னல் பென்னிகுயிக். அவரது நினைவை போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில், லண்டனில் பென்னிகுயிக் சிலை அமைக்கப்பட்டது. அதனை திறந்து வைக்க கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, 7ம் தேதி லண்டன் சென்றார்.
அவருடன் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணகுமார் மற்றும் மதுரை மாவட்ட எம்.எல்.ஏ., ஒருவர் என, நான்கு பேர் லண்டன் சென்றனர்.
கடந்த 8ம் தேதி இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்தார். இதனால், அங்கு 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. எனவே பென்னிகுயிக் சிலை திறப்பு விழா ரத்தானது.
உடனே, அமைச்சர் பெரியசாமி இந்தியா திரும்பி விட்டார். ஆனால், எம்.எல்.ஏ.,க் கள் லண்டனில் இருந்து வர மனமில்லாமல், அங்கு தங்கி இன்பச்சுற்றுலாவில் உள்ளனர்.
மதுரையில் நடந்த பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி இல்ல திருமணம், விருதுநகரில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவில் பங்கேற்காமல், எம்.எல்.ஏக்கள் நான்கு பேரும் சுற்றுலா மேற்கொண்டுஉள்ளனர்.
Input From: Dinamalar