Kathir News
Begin typing your search above and press return to search.

மன்னார்குடி தி.மு.க-வில் வெடித்தது சர்ச்சை! ஆபாசமாகப் பேசித் தாக்கியதாக சொந்த கட்சி மீதே பெண் கவுன்சிலர் புகார்!

மன்னார்குடி தி.மு.க-வில் வெடித்தது சர்ச்சை! ஆபாசமாகப் பேசித் தாக்கியதாக சொந்த கட்சி மீதே பெண் கவுன்சிலர் புகார்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Oct 2022 7:37 AM IST

மன்னார்குடி நகராட்சியில் 11-வது வார்டு கவுன்சிலர் பாண்டவர். 29-வது வார்டு பெண் கவுன்சிலர் கலைவாணி கார்த்திக். இருவருமே தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். பாண்டவர், நகர செயலாளர் மற்றும் நகர் மன்றத் தலைவருக்கு நெருக்கமானவர்.

29-வது வார்டுக்குட்ப்பட்ட பகுதியில் குளத்தைத் தூர்வாரும் பணி நடக்கிறது. மன்னார்குடி எம்.எல்.ஏ பார்வையிட சென்றார். கலைவாணிக்கு மூன்று மாதக் குழந்தை இருப்பதால் எம்.எல்.ஏ ஆய்வு செய்ய வந்தபோது அவரால் செல்ல முடியவில்லை. கணவர் கார்த்திக் மட்டும் சென்றுள்ளார்.

அப்போது கார்த்திக் நகரச் செயலாளரிடம் தன் வார்டில் நடக்கும் பணிகள் குறித்து வாக்குவாதம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. தனது ஆதரவாளரை திட்டியதால் ஆத்திரம் அடைந்த கவுன்சிலர் பாண்டவர், கலைவாணியை போனில் அழைத்து ஆபாசமாக திட்டினார். இந்த ஆடியோ வெளியானது.

இது மட்டுமல்லாது பாண்டவர் தன் தலைமையில் பத்துக்கும் மேற்ப்பட்ட நபர்களை அழைத்துக் கொண்டு கார்த்திக் வீட்டுக்குச் சென்றதுடன் கார்த்திக் அவர் மனைவி கவுன்சிலர் கலைவாணி இருவரையும் தாக்கியுள்ளார். வீட்டில் உள்ள பொருள்களையும் அடித்து சேதப்படுத்தியிருக்கின்றனர்.

நடந்த விவகாரம் குறித்து கலைவாணி திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பியிருக்கிறார்.

Input From: Vikadan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News