Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க-வினரின் வாரிசுகளுக்கே ரேஷன் கடை வேலை: கேமரா இருப்பது தெரிந்தே ஓப்பனாக பேசிய மா.செயலாளர்!

தி.மு.க-வினரின் வாரிசுகளுக்கே ரேஷன் கடை வேலை: கேமரா இருப்பது தெரிந்தே ஓப்பனாக பேசிய மா.செயலாளர்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Jan 2023 1:09 AM GMT

ரேஷன் கடை விற்பனையாளர் நேர்முகத் தேர்வு என்பது வெறும் கண்துடைப்பு என்றும், அந்த வேலைவாய்ப்பு திமுக.,வினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என தென்காசி திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டத்தில் நிரப்பப்பட வேண்டிய கிராம உதவியாளர் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர் பணிகளுக்கு நிறைய பேர் விண்ணப்பங்கள் கொடுத்துள்ளனர்.

35 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 3500 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர் 48 ரேஷன் கடை விற்பனையாளர் பதவிக்கு 4000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.

ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், பேரவை செயலாளர் என முக்கிய பிரமுகர் ஒருவருக்கு ஒரு பணியிடம் என பிரித்து வழங்கியுள்ளோம் என வெளிப்படையாக தெரிவித்தார்.

ரேஷன் கடை உதவியாளர் ரேஷன் கடை விற்பனையாளர் கிராம உதவியாளர் பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நேர்முகத் தேர்வினை அதிகாரிகள் நடத்துகின்றனர்.

இருப்பினும் அந்த நேர்முகத் தேர்வு என்பது வெறும் கண்துடைப்பு திமுகவினருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதை திமுக கூட்டத்தில் வெளிப்படையாக மாவட்ட செயலாளர் பேசினார்.

Input From: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News