நேரா ஆளுநரிடம் மோதினால் வம்பாயிரும்! கூட்டணி கட்சிகளை வைத்து தி.மு.க போடும் பிளான்? இனி அவங்க பாத்துப்பாங்க!
By : Kathir Webdesk
கூட்டணி கட்சிகளை வைத்து, ஆளுநருக்கு நெருக்கடி கொடுக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியான ஆளுநர் ரவி, அதிக ஆண்டுகள் உளவுத் துறையில் பணியாற்றியவர். ஓய்வு பெற்ற பிறகும் உளவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்.
தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர், பிரிவினைவாத இயக்கங்கள் அதிகம் உள்ள நாகாலாந்து கவர்னர் போன்ற பொறுப்புகளில் இருந்தவர்.
இதனால், அவர் நியமிக்கப்பட்ட போதே, தி.மு.க., அரசுக்கு நெருக்கடி நிச்சயம் என, அவரை அறிந்தவர்கள் கூறினர். அது, இப்போது உண்மையாகி உள்ளது. இதுவரை, எந்த கவர்னரும் செய்யாத வகையில், ஆளுங்கட்சியான தி.மு.க.,வின் அடிப்படை கொள்கைகள் குறித்து, கவர்னர் ரவி அடிக்கடி விமர்சித்து வருகிறார்.
சட்டசபையில் அவர் நிகழ்த்திய உரை, நாடு முழுதும் பேசு பொருளாகி உள்ளது.
சட்டசபையில் கவர்னருக்கு எதிராக பேசுவது சட்ட சிக்கலை உருவாக்கும் என்பதால், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு கடிவாளம் போடப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில், சட்டசபையில் கவர்னருக்கு எதிராக தனி நபர் தீர்மானம் கொண்டு வர, காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வாயிலாக, கவர்னருக்கு நெருக்கடி கொடுக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக, கூட்டணி கட்சிகளுக்கு சில பணிகள் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை, நேற்று முன்தினம் சந்தித்த அமைச்சர் உதயநிதி, கவர்னரை எதிர்கொள்வது குறித்து பேசியதாக, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
எனவே, இனி கவர்னர் ரவிக்கு எதிராக ஆர்ப்பாட்டம், கண்டன பொதுக்கூட்டம், மாணவர்கள் போராட்டம், கவர்னர் மாளிகை முற்றுகை என, மாநிலம் முழுதும் எதிரொலிக்கும் என, தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.
Input From: Dinamalar