Kathir News
Begin typing your search above and press return to search.

மகன் போட்டியிட இருந்த நிலையில் இளங்கோவன் திடீரென முடிவை மாற்றக் காரணம் என்ன?

மகன் போட்டியிட இருந்த நிலையில் இளங்கோவன் திடீரென முடிவை மாற்றக் காரணம் என்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Jan 2023 2:23 AM GMT

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் 31ம் தேதி தொடங்கும், வாக்குப்பதிவு பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக தனது இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடுவார் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் அறிவித்தார்.

சஞ்சய் அரசியலுக்குப் புதியவர் மட்டுமல்ல; கட்சிப் பணிகளில் ஈடுபடாத தொழிலதிபர். சஞ்சய்க்கு பதிலாக இளங்கோவன் தேர்தலில் நிற்க வேண்டும் என்று திமுகவினர் விருப்பம் தெரிவித்தனர். இந்நிலையில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இளங்கோவன் வீட்டுக்கு, முதல்வர் ஸ்டாலின் சென்றார். இளங்கோவன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். அப்போது, ​​இடைத்தேர்தலில் இளங்கோவன் போட்டியிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியதாக தெரிகிறது.

இதையடுத்து, போட்டியிடும் முடிவை மாற்றிக் கொண்ட இளங்கோவன், தான் போட்டியிடுவதாக டெல்லி மேலிடத்திடம் கூறினார். ​​இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இளங்கோவன் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றால், சட்டசபையில் நல்ல பேச்சாளராக இருப்பார் என்றும், கேலி, கிண்டல் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து, கலகலப்பாக வைத்திருப்பார் என்றும் இளங்கோவன் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Input From: தினமலர்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News