ரெய்டு முடிந்தவுடன் பிபிசி தனது ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தி - அம்பலமான உண்மை!
By : Mohan Raj
கடந்த 14ம் தேதி டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் தொடங்கிய வருமான வரித்துறையினரின் ரெய்டு 60 நேரத்திற்கு பின்னர் ஒருவழியாக நிறைவடைந்துள்ளது. இந்த ரெய்டு முடிந்தவுடன் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்ற பட்டதால் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
இந்த ரெய்டு நடவடிக்கை அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது ஆனால் இது வழங்கமான ஒன்றுதான் என வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெய்டு காரணமாக பிபிசி அலுவலகத்தில் சுமார் 10 ஊழியர்கள் 60 மணி நேரமாக தங்கியிருந்தனர். காரணம் ரெய்டு நடக்கும் சமயம் முக்கியமான ஆவணங்கள் எதுவும் வெளியே சென்று விடக்கூடாது முக்கியமான தகவல்கள் வெளியே சென்று விடக்கூடாது என்பதில் வருமானவரித்துறையினர் உறுதியாக இருந்தனர். அதனைப் போல் எந்த ஒரு நிறுவனத்திலும் ரெய்டு நடக்கும் சமயம் அங்கு வேலை செய்யும் ஊழியர்களும் யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள, இந்த நடவடிக்கையே பிபிசி ரைடு விவகாரத்திலும் கடைபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த ரைடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயம் பிபிசி தனது ஊழியர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில், 'விசாரணை அதிகாரிகளுக்கு ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், கம்யூட்டரிலிருந்து செல்போன் வரை அனைத்தையும் அவர்கள் அணுக அனுமதிக்க வேண்டும் என பிபிசி தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த ரெய்டு இரவு சுமார் 11 மணியளவில் முடிவுக்கு வந்தது. ரெய்டில் ஊழியர்கள் முழுமையான ஒத்துழைப்பை கொடுத்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் பிபிசி தனது ஊழியர்களுக்கு ஒரு தகவலை அனுப்பியுள்ளது. அதாவது, 'இந்த சம்பவங்கள் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் அழுத்தத்தையும், வருதத்தையும் தரும் அனுபவமாக தொடர்கிறது என்பதை நாங்கள் அறிகிறோம். ரெய்டு முடிந்த பின்னர் தொடர்புகொள்கிறோம். அதேபோல ஊழியர்கள் சோஷியல் மீடியாவிலிருந்து விலகி இருப்பதற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். ஏனெனில் இதில் ரெய்டு குறித்து உண்மைக்கு மாறான செய்திகள் பல வலம் வருகின்றன. எனவே இந்த தவறான செய்தியின்பால் தூண்டப்பட்டு புகார் ஏதும் அளிக்கக்கூடாது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
நாங்கள் ஊழியர்களான உங்களுக்கு முழு ஆதரவை அளிக்கிறோம். உங்களில் சிலர் நீண்ட கேள்வியை எதிர்கொண்டுள்ளனர். சிலர் இரவு முழுவதும் அலுவலகத்திலேயே தங்க வைக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை இயல்புக்கு திரும்பியுள்ளது. எனவே இந்தியாவிலும், அதற்கு அப்பாலும் உள்ள மக்களுக்கு சேவை செய்ய தயராக இருப்போம். பிபிசி ஒரு நம்பகமான சுதந்திரமான ஊடக அமைப்பு. மேற்குறிப்பிட்டதைப்போல நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு முற்றிலும் துணையாக இருக்கிறோம்' என்று கூறியுள்ளது.
பிபிசியில் சோதனை நடந்தது நாடு முழுவதும் பல அரசியல் சர்ச்சை கருத்துக்களை அனைத்து தரப்பிலும் எழுப்பி இருந்தாலும் இந்த சோதனை வருமானவரித்துறை தங்களுக்கு வரும் தரவுகளின் அடிப்படையில் வழக்கமாக நடத்தும் சோதனை ஒன்றுதான் இதில் எந்த அரசியல் காரணமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.