ஈரோடு நமக்கு கிடையாது முதல்வரே - பறந்த உளவுத்துறை ரிப்போர்ட், மீண்டும் தூக்கம் தொலைத்த ஸ்டாலின்
By : Mohan Raj
ஈரோடு கிழக்கில் வரும் தகவல்கள் அதிமுக கூட்டணி தரப்பிற்கு சாதகமாக இருப்பதால் திமுக தரப்பு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். மறுபுறம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு போட்டியிடுவதால் எடப்பாடி பழனிசாமி அங்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கில் களநிலவரம் திமுக தரப்பிற்கு பின்னடைவையும், அதிமுக தரப்பிற்கு சாதகமாகவும் இருக்கிறது, மேலும் அதிமுகவினர் அதிரடி பிரச்சாரம் வேறு செய்து வருவதால் திமுகவினர் திக்குமுக்காடி போய் உள்ளனர். அங்கே அதிமுக இரட்டை இலை சின்ன விவகாரம் சுமூகமாக முடிந்ததால் அதிமுக கூட்டணி தரப்பு வேகமாக பிரச்சாரம் செய்தது. மேலும் ஆளும் திமுக மீது வாக்குறுதியை மக்களுக்கு நிறைவேற்றுவதில் வேகம் காட்டாத காரணத்தினால் திமுக மீதுள்ள அதிருப்தியை அதிமுக தரப்பு வாக்குகளாக அறுவடை செய்துவருகிறது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு கள நிலவரம் தொடர்பாக ரிப்போர்ட் ஒன்று முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றதாக கூறப்படுகிறது. தற்போது திமுகவும் இங்கே வேகமாக செயல்பட்டு வருகிறது. இதனால் வரும் நாட்களில் முதல்வரும் பிரச்சாரம் செய்ய போகிறார். அது மட்டுமல்லாது இனி உதயநிதி வேறு பிரச்சாரம் செய்வார்.
இப்போது வெறும் காங்கிரஸ் வேட்பாளர் என்ற இமேஜ்தான் இருக்கிறது. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு பின் நிலைமை அடியோடு மாறும் என அறிவாலயம் தரப்பு கணக்கு போடுகிறது, மேலும் இந்த தேர்தலை திமுக தரப்பு முக்கியமானதாக பார்க்கிறது காரணம் 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி கணக்குகள்.
எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற வேண்டும். தங்கள் ஆட்சிக்கு இந்த தேர்தல் ஒரு மதிப்பீடு போல இருக்கும் என்று திமுக நினைக்கிறது. ஸ்டாலின், உதயநிதி பிரச்சாரத்திற்கு பின் களநிலவரம் மேலும் வேகமாக இருக்கும், இந்த நிலையில் கடந்த 14ம் தேதி திமுக கூட்டணியின் 10 பணிமனைகள் மூடி தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் சீல் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு திமுக ஒரு அமைச்சர் 30 ஆயிரம் வாக்குகளை பார்த்தாலே போதும் என்ற நிலையில் திமுக கணக்கு போட்டு வேலை செய்துவருகிறது.
மேலும் ஈரோடு கிழக்கில் மக்கள் மத்தியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியினரை பிரச்சாரத்திற்கு அழைத்து செல்லவில்லை எனவும், வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பெரும்பாலான இடங்களுக்கு பிரச்சாரத்திற்கு செல்வதில்லை என்பதும் திமுக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மின் கட்டண உயர்வு, குடும்பத்தலைவிகள் மாதம் 1000 ரூபாய் வாக்குறுதி, நெசவாளர்கள் பிரச்சினை, தொழிலதிபர்கள் பிரச்சினை போன்ற அனைத்துமே ஆளும் திமுக அரசிற்கு எதிராகவே இருக்கிறது முதல்வர் ஸ்டாலினின் தூக்கத்தை மேலும் கெடுக்கிறது.