அம்மா இருக்கும்போது 'தெனாலி', ஈரோடு கிழக்கில் 'சண்டியர்' - கமல்ஹாசனின் அரசியல் பல்டிகள்
By : Mohan Raj
விஸ்வரூபம் பட விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி கூறிவிட்டு சரியாக 12 ஆண்டுகள் கழித்து ஒரு அம்மையார் என்னை தடுமாற வைத்தார் என கமலஹாசன் பல்டி அடித்து கட்சி மாறி உள்ள விவகாரம் மக்கள் நீதி மையத்தை பார்த்து மக்கள் சிரிக்கும் அளவிற்கு நிகழ்ந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது திமுக கூட்டணிக்கு ஆதரவாக திமுகவை எதிர்த்து கடந்த ஆண்டுகளில் அரசியலில் பேசி வந்த கமலஹாசன் தற்பொழுது திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார்.
இதையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக நேற்று கருங்கல்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன். அப்போது பேசிய அவர், “ஆபத்து காலத்தில் சின்னம், கட்சியை தாண்டியது தேசம் என்பதால் பரப்புரைக்கு வந்தேன். விஸ்வரூபம் படம் எடுத்தேன். அப்போது, என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார். கலைஞர் என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா? என கேட்டார். இப்போது முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலினும், என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் இருக்கிறோம் என்றார். அது என் பிரச்சனை என்பதால் நான் மறந்துவிட்டேன். இப்போது தேசத்திற்காக கூட்டணி வைத்துள்ளேன். மாற்றத்தை கொண்டு வரும் திறன் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை சரியான நேரத்தில் நினைவூட்டுகிறேன். நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்காகவோ, ஆதாயத்துக்காகவோ அல்ல, நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன். என் பயணத்தை பாருங்கள்' என என பேசினார்.
இப்படி சரியாக 12 ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வரூபம் பட விவாகரத்தில் இஸ்லாமியர்கள் பிரச்சனை செய்யும் பொழுது நான் நாட்டை விட்டு வெளியேறுவேன் என கமல்ஹாசன் கூறியது அப்பொழுது பரபரப்பு ஏற்படுத்தியது.
அப்பொழுது நாட்டை விட்டு ஓடி விடுவேன் என கூறிய கமலஹாசன் விழுந்தது என்னவோ ஆளும் அதிமுகவின் கால்களில் தான், அப்பொழுது முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா அந்த பிரச்சினையை தலையிட்டு தீர்த்து வைத்தார். படமும் வெளியானது!
கமலஹாசனுக்கு முதல் 100 கோடி ரூபாய் வசூல் வசூலை குவித்த படம் விஸ்வரூபம் என்ற பெருமையை தேடித்தந்தது. ஆனால் தற்பொழுது ஒரு அம்மையார் என்னை தடுமாற வைத்தார் என மடை மாற்றி பேசி உள்ளார் கமலஹாசன்.
அம்மையார் இருக்கும்போது தெனாலியாக இருந்துவிட்டு அம்மையார் இறந்த பிறகு சண்டியர் அரசியல் செய்வது எந்த விதத்தில் நியாயம் என அதிமுகவினர் இப்பொழுதே கேள்வி எழுப்ப துவங்கிவிட்டனர்.