'போதும் சாமி உங்க ரீல் அந்து போச்சு' - திமுக அரசை எதிர்த்து போராட்டத்தில் இறங்கும் ஜாக்டோ ஜியோ
By : Mohan Raj
இனி திமுக அரசை நம்பினால் நடுத்தெருதான் என முடிவெடுத்து திமுக அரசை எதிர்த்து ஜாக்டோ ஜியோ மாபெரும் போராட்டத்தை அறிவித்துள்ளது.
கடந்த 2021 ஆம் தேர்தலில் திமுக எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருக்கு கோடிகளில் செலவு செய்த அழைத்து வந்தது, அவரும் பல வியூகங்களை வகுத்தது மட்டுமல்லாது, இணையங்களிலும், தொலைக்காட்சிகளிலும், பத்திரிகை விளம்பரங்களிலும் அதிக மக்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் அவர் வகுத்துக்கொடுத்த தேர்தல் பிரச்சார வியூகங்கள் மூலம் திமுக ஆட்சிக்கு வந்தது.
மேலும் 2021 தேர்தல் சமயத்தில் திமுகவின் முக்கிய தலைவர்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, அந்தியூர் செல்வராஜ், ஆராசா உள்ளிட்டவர்களை வைத்து 505 வாக்குறுதிகள் கொண்ட புத்தகத்தை அச்சிட்டது திமுக, அச்சிட்டது மட்டுமின்றி இந்த வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் எனவும் மக்களிடத்தில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக திமுக வாக்கு கொடுத்தது. அந்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தனர், குறிப்பாக அரசு ஆசிரியர்களுக்கு, ஜாக்டோ ஜியோ சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய முறை வழங்கப்படும், எனவும் அகவிலைப்படி உயர்வு என்பது போன்ற நிறைய, நிறைய வாக்குறுதிகளை கொடுத்தது. இதனால் இதற்கு காரணமாகவே திமுக 2021 தேர்தலில் வெற்றி பெற்றது.
ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகுதான் திமுகவின் சுயரூபம் மக்களுக்கு தெரிந்தது, காரணம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாக மக்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகள் வெறும் புத்தகத்தில் அச்சிடப்பட்ட வாக்குறுதிகளாகவே இருந்ததே தவிர எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இதற்காக ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் பலமுறை முதல்வர் ஸ்டாலினிடமும், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தனர். ஆனால் திமுக அரசு எதற்கும் அசைவதாக தெரியவில்லை, வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம்! விரைவில் நிறைவேற்றும் எனக்கூறி இரண்டு வருஷங்களை ஓட்டிவிட்டது. தற்போது ஈரோடு இடைத்தேர்தல் நடக்கும் நிலையில் கூட அந்த வாக்குறுதிகள் பற்றி ஆளும் திமுக தரப்பினர் பேச மறுத்து வருகின்றனர்.
இது ஜாக்டோ ஜியோ சங்கத்தினரை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது, மேலும் இது இப்படியே சென்றால் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு இவர்கள் எதுவுமே செய்ய மாட்டார்கள் பின்பு இவர்களை நம்பி காத்திருக்கும் அரசு ஊழியர்கள், அரசு ஊழியர்கள் பணிக்காக காத்திருப்பவர்களின் நிலை என்ன ஆவது என பொருத்து பொறுத்து பார்த்த ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் தற்பொழுது மாபெரும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தின் மூலமாக ஆளும் திமுக அரசுக்கு பாடம் கற்பிக்க ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் முடிவு செய்துவிட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த கோரி, மாவட்டத் தலைநகரங்களில், மார்ச் 5ல் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என 'ஜாக்டோ- ஜியோ' அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தஞ்சாவூரில் ஜாக்டோ- ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு போராட்ட ஆயத்த மாநாடு நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 4 சதவீத அக விலைப்படியை முன் தேதியிட்டு, நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 5ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதமும்; மார்ச் 24ம் தேதி மாவட்ட தலைநகரங்களில், மனித சங்கிலி போராட்டமும் நடத்துவது என, மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இனி ஆளும் திமுக தரப்பை நம்பி வேலைக்காகது, போராட்டம் மட்டுமே இவர்களிடம் வேலை நடக்கும் என ஜாக்டோ ஜியோ சங்கத்தின் நிர்வாகிகள் ஒரு முடிவுடன் களத்தில் இறங்கிவிட்டனர்.