'அண்ணே அழகிரி அண்ணே! தம்பியை காப்பாத்துங்க' - அண்ணனிடம் சரண்டர் ஆகப்போகும் முதல்வர் ஸ்டாலின்

கட்சியில் அடுத்தடுத்து விரிசல்கள் விழத்துவங்கியுள்ளதால் தனது அண்ணணாகிய மு.க.அழகிரி அவர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் கட்சி பற்றிய தகவல்களை கூறி சமாதானம் பேசத்தயாராகிவிட்டார் தகவல்கள் கிடைத்துள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகன்கள் ஒருவர் மு.க.அழகிரி மற்றொருவர் மு.க.ஸ்டாலின். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மு.க.அழகிரி திமுகவில் கோலோச்சி அசைக்கமுடியாத சக்தியாக வலம் வந்தார். தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பதவியிலிருந்த மு.க.அழகிரிக்கு கட்சியில் அவ்வளவு மரியாதை இருக்கும். இடைத்தேர்தல் என்றாலே அழகிரி, அழகிரி என்றாலே இடைத்தேர்தல் என்ற அளவிற்கு திருமங்கலம் ஃபார்முலா என்ற ஒரு பார்முலாவையே கண்டுபிடித்தார் மு.க.அழகிரி. இன்றைக்கு ஈரோட்டில் இடைத்தேர்தல் களம் எல்லாம் அன்றைக்கு திருமங்கலத்தில் அழகிரி வகுத்து வைத்த பார்முலாவில் தான் பயணிக்கிறது என்றால் அது மிகை ஆகாது.
அந்த அளவிற்கு அழகிரி திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார், பின்னர் சில காலங்களில் ஏற்பட்ட குடும்ப விரிசல் காரணமாக அழகிரி திமுகவிலிருந்து ஒதுக்க ஆரம்பிக்கப்பட்டார். பின்னர் மெல்ல மெல்ல மு.க.ஸ்டாலின் குடும்பம் திமுகவை ஆக்கிரமிக்க துவங்கியது, மு.க.அழகிரி திமுகவை விட்டு மெல்ல வெளியேற்றப்பட துவங்கினார். பின்னர் கருணாநிதி இறந்ததற்குப் பிறகு முற்றிலும் அழகிரி அரசியலை விட்டு ஒதுங்கினார். அவருடைய ஆதரவாளர்களும் பலர் அரசியல் இருந்தே விலகி விட்டனர், சிலர் மு.க.ஸ்டாலின் பக்கம் வந்துவிட்டனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் மதுரை சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பாவான அழகிரி அவர்களை சந்தித்து விட்டு வந்தார். அவரைப் பார்த்தது மட்டுமல்லாமல் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. அப்போது திமுக கட்சியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள விரிசல்கள், குறித்தும் திமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிருப்தியாக இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இது இப்படி இருக்கையில் அப்பொழுது மு.க.அழகிரி உதயநிதி சந்தித்து விட்டு வந்தது பரபரப்பாக பேசப்பட்டது, மேலும் திமுக இப்பொழுது இருக்கும் நிலைமையில் அழகிரியின் கண்டிப்பாக ஸ்டாலினுக்கு தேவைப்படும் என்றே தெரிகிறது.
இந்த சூழலில் வரும் வாரங்களில் மதுரைக்கு ஆய்வுக்கு செல்லவிருக்கிறார், மு.க.ஸ்டாலின் அவ்வாறு முதல்வர் ஸ்டாலின் செல்லும் பொழுது தனது அண்ணன் அழகிரியை சந்திப்பார் என கூறப்படுகிறது. மிக நீண்ட நாட்களாக இருவரும் சந்திக்காமல் இருந்து தற்போது சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது, இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு திமுகவிற்காக உழைத்தவர்கள் பெற்ற பலனைவிட மற்ற சிலர் அடைந்த பலன்தான் அதிகம். திமுகவிற்காக உழைத்தவர்கள் சிலரால் ஒதுக்கப்பட்டனர் என்பதே குற்றச்சாட்டாக உள்ளது.
அதில் சிலரோ, 'நாங்கள் திமுக ஆட்சிக்கு வர்றதுக்காக உழைத்தோம். ஆனால் இன்று திமுக ஆட்சியில் யார் யாரோ பயன் அடைகிறார்கள் எங்களுக்கு ஒன்றுமே இல்லை என ஒரு சிலர் அதிருப்தியுடன் திமுகவில் வலம் வருகின்றனர். குறிப்பாக திமுகவை வளர்த்தெடுத்த சீனியர்கள் ஒரு சில குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் காரணமாக திமுகவை விட்டு விலகி இருப்பதும் மீண்டும் இதன் காரணமாக திமுக எந்த காலத்திலும் உடையும் என்ற நிலையில் இருப்பதாகவும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.
அப்படி சீனியர் தலைவர்கள் அதிர்ச்சியில் இருப்பதால் அவர்கள் முதல்வர் ஸ்டாலின் பேச்சை விட மு.க.அழகிரியின் பேச்சைக் கேட்பார்கள் எனவே மீண்டும் மு.க.அழகிரி உள்ளே வரும் பட்சத்தில் ஆட்சியை ஸ்டாலினும் கட்சியை மு.க.அழகிரியும் கவனித்து வழிநடத்த சரியாக இருக்கும் என சில கணக்குகளை போட்டுள்ளதாம் முதல்வர் ஸ்டாலின் தரப்பு, அவ்வாறு அழகிரி கட்சியின் ஆலோசராக இருந்து வழிநடத்தும் பட்சத்தில் சில அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தவும் முடியும் என நம்புகிறதா முதல்ல ஸ்டாலின் குடும்பம். அப்படி அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் பட்சத்தில் கட்சி உடையாமல் காப்பாற்ற முடியும். மேலும் கட்சி உடையாமல் காப்பாற்றினால் வரும் 2024 2026 தேர்தல் களில் எதிர்க்கட்சிகளை வலுவாக சந்திக்க முடியும் எனவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் இது குறித்து வரும் வாரங்களில் ஆலோசிக்க மதுரைக்கு ஆய்வுக்கு செல்லவிருக்கும் முதல்வர் ஸ்டாலின் அப்போது மு.க.அழகிரியை சந்திப்பார் எனவும் தெரிகிறது!
இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணைக்கு வந்தபோது மு.க.அழகிரியிடம் முதல்வர் வருகை பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர், 'முதலமைச்சர் மதுரைக்கு வருவதே காலையில் தான் தெரிந்துகொண்டேன் என்னை சந்திப்பாரா என்பது எனக்கு தெரியாது' என தெரிவித்தார்.
இந்தமுறை மதுரையில் கண்டிப்பாக மு.க.அழகிரியை சந்தித்து உதவியை நாடுவார் முதல்வர் ஸ்டாலின் என்றே கூறுகின்றன சில அறிவாலய வட்டாரங்கள்.