Kathir News
Begin typing your search above and press return to search.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பிரச்சாரத்துக்கே வரமாட்டேங்குறார் இதுல ஜெயிச்சுட்டா சுத்தமா வரமாட்டார்! - ஈரோடு கிழக்கு அட்ராசிட்டிகள்!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பிரச்சாரத்துக்கே வரமாட்டேங்குறார் இதுல ஜெயிச்சுட்டா சுத்தமா வரமாட்டார்! - ஈரோடு கிழக்கு அட்ராசிட்டிகள்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  23 Feb 2023 5:20 AM GMT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஓட்டு கேட்க கூட வருவதில்லை என மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து நாளுக்கு நாள் சர்ச்சை அதிகரித்து வருகிறது, ஒருபுறம் மக்கள் மத்தியில் கட்சியினர் செய்யும் பிரச்சாரங்கள் சலசலப்பு, மறுபக்கம் கட்சியினர் கூறும் கருத்துக்கள் சலசலப்பு என இரு பக்கமும் வைரல் ஆகி வருகிறது ஈரோடு கிழக்கு.


எடப்பாடி பழனிச்சாமி ஆம்பளையா என கேட்ட விவகாரமும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் குறித்து பேசிய பேச்சும் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி உள்ளது. மேலும் உதயநிதியை அண்ணாமலை செங்கல் வைத்து செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இப்படி தினம் தினம் அரசியல் உலகில் கடும் சர்ச்சைகளை எழுப்பி வந்த ஈரோடு இடைத்தேர்தல் மேலும் ஒரு முக்கிய சம்பவமாக வேட்பாளர் பிரச்சாரத்திற்கே வர மாட்டேங்கிறார் என்ற சம்பவமும் அரசியல் உலகை அதிரவைத்துள்ளது.


ஈரோடு கிழக்கு தேர்தலில் திமுக கூட்டணி அங்கு காங்கிரஸ் கட்சியை போட்டியிட வைத்துள்ளது, ஏற்கனவே இறந்த திருமகன் ஈவேரா எம்.எல்.ஏ காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் திருமகன் ஈவேரா அவர்களின் தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது.

தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதிலிருந்து திமுகவின் உற்சாகம் சற்று குறைந்தபடியே காணப்பட்டது. மேலும் இந்த தேர்தலில் எப்பயாவது வெற்றி பெற வேண்டும் என்பதே ஒரே நோக்கத்துடன் திமுக வேலை செய்து வருவதால் கட்சியினருக்கு அது பெரிதாக தெரியவில்லை.


ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் நடவடிக்கைதான் அங்குள்ள திமுகவினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது மூப்பு மற்றும் மகன் இறந்ம காரணத்தினார் சரிவர பிரச்சாரத்திற்கே இளங்கோவன் அவர்கள் வருவதில்லையாம்.

ஒரு நாளைக்கு நான்கு இடத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றால் காலையிலிருந்து கிளம்பி இரண்டு இடத்தில் மட்டும் பிரச்சாரம் செய்துவிட்டு அவரது இரண்டாவது மகன் சஞ்சய் அவர்களை நீயே பார்த்துக் கொள்ளப்பா என சென்று விடுகிறார் என அதிருப்தி நிலவுகிறது.

திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்தால் கூட இளங்கோவன் வருவதில்லையாம், மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் குறிப்பாக எளிய மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிக்கு செல்வதே இல்லையாம், இப்படி பல சச்சரவு எழுந்து வருவதன் காரணமாக திமுக கட்சியினர் அங்கு சொல்லமுடியாத மனநிலையில் உள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது.

இப்படி பல இடங்களில் பிரச்சாரம் செய்வதை தவிர்த்து வரும் வேளையில் இவர் பிரச்சாரம் செய்யவே மக்களை சந்திக்க வரமாட்டேங்கிறாரே நாளை ஜெயித்தால் எப்படி வந்து தொகுதியில் வேலை செய்வார்? நாளை இவரிடம் மக்கள் எப்படி சென்று பார்க்க முடியும்? மக்களின் குறைகளை எப்படி சொல்ல முடியும்? அதை இவர் எப்பொழுது சரி செய்வார் என கேட்க முடியும்? என இப்பொழுதே மக்கள் சந்தேகிக்க துவங்கிவிட்டனர்.

என்னதான் ஆளுங்கட்சி திமுக ஈரோடு கிழக்கில் தீயாக வேலை செய்கிறது என்றாலும், மற்ற கட்சிகளை விட அதிக பிரச்சாரம் செய்கிறது என்றாலும், பணம் அதிகமாக செலவழிக்கிறது என்பது போன்ற பிம்பங்கள் இருந்தாலும் வேட்பாளர் சரியில்லாத காரணத்தினால் திமுக கூட்டணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிவாலய வட்டாரத்தில் இருந்து ஈவிகேஸ் இளங்கோவனிடம் பேசுவதற்கு பயப்படுகின்றனாராம், அவரிடம் போய் சொல்லி யார் வம்புல போய் மாட்டிகிறது, சொன்னால் வேறு அவர் கேட்க மாட்டாரு! அவரே பையனா இறந்த தூக்கத்துல இருக்காரு அவருக்கு தொகுதி கொடுத்திருக்கோம். நம்ம தான் வேலை செய்து எப்படியாவது அந்த தொகுதி அவருக்கு ஜெயிச்சு கொடுக்கணும்' அப்படின்னு சொல்லி திமுகவினர் கம்மென்று இருந்து விடுகிறார்கள்.

இன்னொரு பக்கம் 18 எம்எல்ஏக்கள் வைத்துள்ள காங்கிரஸ் கட்சியினரும் ஒரு எம்எல்ஏ கூட அங்கே சென்று எட்டிக்கூட பார்க்க வில்லையாம், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஜெயித்தால் சந்தோஷம், தோற்றால் அதைவிட சந்தோசம் என்கிற ரீதியில் காங்கிரஸ் கட்சி இருப்பதால் மாட்டிக் கொண்டு விழிப்பது என்னவோ ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் தான் என கூறுகின்றனர்.

இந்த நிலையில் இன்னும் நான்கு நாட்கள் பிரச்சாரம் மீதம் இருக்கும் நிலையில் ஈரோடு தொகுதியில் பணப்பட்டுவாடா மற்றும் பொருட்கள் விநியோகம் போன்ற முறைகேடுகள் ஏற்பட்டால் தேர்தல் நடப்பதை தள்ளி வைப்பதற்கு விதிமுறையில் வழி இருப்பதால் என்ன நடக்குமோ என்ற ஆர்வம் மக்களிடையே எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News