Kathir News
Begin typing your search above and press return to search.

'ஐயா இந்த அண்ணாமலை தொல்லை தாங்கல, எதாவது நடவடிக்கை எடுங்க' - காவல்துறையிடம் அலறிக்கொண்டு ஓடிய திருமாவளவன்!

ஐயா இந்த அண்ணாமலை தொல்லை தாங்கல, எதாவது நடவடிக்கை எடுங்க - காவல்துறையிடம் அலறிக்கொண்டு ஓடிய திருமாவளவன்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  28 Feb 2023 3:14 AM GMT

அண்ணாமலையின் அரசியல் யாருக்கு தூக்கத்தை கெடுத்ததோ இல்லையோ திருமாவளவனுக்கு கண்டிப்பாக தூக்கத்தை கெடுத்துள்ளது, இதன் காரணமாக அண்ணாமலை குறித்து டி.ஜி.பி சைலேந்திரபாபுவிடம் புகார் மூலம் கதறிவிட்டு வந்துள்ளார் திருமாவளவன்.

தமிழக அரசியலில் இடதுசாரிகளுக்கு குறிப்பாக திருமாவளவன், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிகுந்த தலைவலியாக இருந்து வருகிறார். தமிழக பாஜகவின் அசுர வளர்ச்சியும், இடதுசாரிகளின் அசுர வீழ்ச்சியும் ஒரே புள்ளியில் இணைகின்றது. குறிப்பாக அண்ணாமலையின் வளர்ச்சி திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரும் அரசியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. இப்படியே சென்றால் வரும் காலத்தில் தங்களது கட்சியை கலைத்து விட்டு திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இணைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற விளிம்பு நிலைக்கு திருமாவளவன், கம்யூனிஸ்ட் வந்துள்ளனர்.

அண்ணாமலை செய்யும் விஷயங்களிலும், பேசும் அரசியலிலும் ஏதாவது குறை கண்டுபிடித்து அதில் அரசியல் செய்யலாமா? அதை வைத்து அண்ணாமலையின் அரசியலுக்கு, அண்ணாமலையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடலாமா என ஒவ்வொரு கணமும் கழுகு போன்று பார்த்து வருகின்றனர் இடதுசாரி கட்சிகள். ஆனால் அண்ணாமலை இவற்றையெல்லாம் தாண்டி தெளிவாக தன் பாதையை வகுத்து வருகிறார், தான் பேசும் கருத்திலும், செய்யும் அரசியலிலும் ஒவ்வொன்றிலும் தெளிவான விஷயங்களை மக்கள் முன் எடுத்து வைக்கிறார். அண்ணாமலை கூறுவது சரியே என மக்களும் குறிப்பாக இளைஞர்களும் பேசி வருவது இடதுசாரிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

இப்படியே சென்றால் வரும் காலத்தில் தாங்கள் எதனை வைத்து அரசியல் செய்தோமோ அதை அனைத்தையும் அண்ணாமலை உடைத்துவிடுவார் போலிருக்கிறது என பயந்து நடுங்கி வருகின்றன இடதுசாரிகள். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராணுவ வீரர் ஒருவர் திமுகவினரால் அடித்துக் கொல்லப்பட்டது மற்றும் தடா பெரியசாமியின் வீடு மர்மநபர்களால் அடித்து உடைக்கப்பட்டதற்கு தொடர்பாக தமிழக பாஜக சார்பில் ஒரு மாபெரும் போராட்டத்தை அறிவித்தார்.

அந்த போராட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அனைவரும் கலந்துகொண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனை பொறுக்காத இடதுசாரிகள் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையில் அண்ணாமலை வளர்ச்சிக்கு முட்டுக்கடை போடுவதற்கான வேலைகளை துவங்கியுள்ளது. இது குறித்து திருமாவளவன் தனது ட்விட்டரில் அண்ணாமலை பேசியதை எடிட் செய்து பதிவு போட்டிருந்தார், அதாவது அண்ணாமலை 'மோடி இருக்கிறார் பார்த்துக் கொள்வார், சுட்டு தள்ளுங்கள்' என கூறியதை மட்டும் எடுத்து வெட்டி, ஒட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டு அது குறித்து 'பார்த்தீர்களா இதுதான் பாஜக' என குறிப்பிட்டார்.

ட்வீட் செய்தது மட்டுமில்லாமல் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து புகார் கொடுத்துள்ளார் திருமாவளவன். மேலும் இந்த புகாரை கொடுத்துவிட்டு திருமாவளவன் செய்தியாளர்களை சந்திக்கும் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து புகார் கொடுத்துள்ளேன் நடவடிக்கை குறித்து பார்க்கலாம் என கூறியுள்ளார்.

இப்படி இத்தனை நாள் வரையில் திமுகவினருக்கு மட்டும் தலைவலியாக இருந்து வந்த அண்ணாமலை தற்போது இடதுசாரிகளுக்கு தூக்கமே போகும் அளவிற்கு சென்றுள்ளது. அதிலும் குறிப்பாக திருமாவளவன் அண்ணாமலை எண்ணி தூக்கமின்றி தவிக்கிறார் என்பது நிச்சயமாகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News