சாவர்க்கர் விவகாரத்தை வைத்தே ராகுல்காந்திக்கு முடிவுரை எழுத அமித்ஷா போட்ட அதிரடி திட்டம் - பரபர பின்னணி!
By : Mohan Raj
சாவர்க்கர் விவகாரத்தை வைத்து ராகுலுக்கு அரசியல் ரீதியாக முடிவு கட்ட அமித்ஷா களம் இறங்கியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது 2019ஆம் ஆண்டு அவதூறு வழக்கு தொடரப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் குடும்ப பெயரை அவதூறாக பேசியதாக இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் வியாழக்கிழமை (மார்ச் 23) தீர்ப்பளித்தது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறை தண்டனைக்கு பிறகு சட்டத்தின்படி ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது, மேலும் ராகுல் காந்தி அரசு ஒதுக்கிய வீட்டை காலி செய்யவேண்டும் என விதிகளின்படி நோட்டீஸ் விடுக்கப்பட்டது. ராகுல் காந்தி தண்டனை விதிக்கப்பட்டதும் முதற்கட்டமாக பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கூற வேண்டும் என பாஜக தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டது.
அந்த சமயத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்த பொழுது இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டதற்கு, 'மன்னிப்பு கேட்பதற்கு நான் ஒன்றும் சாவர்க்கர் அல்ல என் பெயர் ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்க மாட்டேன்' என தெரிவித்தார். சவக்கர் பற்றி பல்வேறு தருணங்களில் ராகுல் காந்தி இதுபோல கடுமையாக விமர்சித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு அனைத்து தரப்பிலிருந்து பெரும் கண்டனங்கள் இருந்தன, நீங்கள் ராகுல் காந்தியாக இருந்தாலும் சாவர்க்கரை எப்படி இதுபோன்ற இழிவாக கூறலாம் என்பது போன்று பல சர்ச்சைகள் வெடித்தன. குறிப்பாக கூற வேண்டும் என்றால் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்து வரும் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே கூட சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போற்றவர், அவரை நீங்கள் இவ்வாறு விமர்சித்து பேசுவது எங்களுக்கு பிடிக்கவில்லை என சற்று கடுமையாகவே கூறினார்.
மேலும் பல இடதுசாரிகள் ஏன் இப்பொழுது சாவர்க்கரை பற்றி பேச வேண்டும், இந்த பேச்சு ராகுலுக்கு முதிர்ச்சி இல்லை என்பதையே என கூறினார்கள். சாவர்க்கரை பற்றி ராகுல் காந்தி பேசுவதற்கு தேவை இல்லாத வேலை, மேலும் பாஜகவிற்கு வலிமை சேர்க்குமே தவிர ராகுல் காந்திக்கு எதுவும் நன்மையாக நடக்கப்போவதில்லை என்பது ரீதியிலான கருத்துக்களை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில் சாவக்கரை பற்றி பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்ட தீர வேண்டும் எனவும் சாவர்க்கருக்கு விழா எடுக்கப்படும் எனவும் சிவசேனா தரப்பில் இருந்து ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலத்தில் யாத்திரை அறிவித்துள்ளார்.
இப்படி ராகுல் காந்தி சாவர்க்கர் என்ற பெயரை அவதூறாக பேசியது அரசியல் ரீதியாக பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாவர்க்கர் ராகுல் காந்தி பற்றி பேசிய விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பாக நடத்தப்பட்டது ரைசிங் இந்தியா மாநாட்டில் அமித்ஷா கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அவதூறு வழக்கு விபகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க விரும்பவில்லை என்றால் அதனைத் தான் அவர் சொல்லியிருக்க வேண்டும் ஆனால் அதனை விடுத்து விட்டு சாவர்க்கரின் பெயரை ராகுல் காந்தி கலங்கப்படுத்தி உள்ளார். இது தவறான செயலாகும் இந்தியாவின் விடுதலைக்காக அதிக பாதிப்புகளை சந்தித்த சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவர் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர் என்றால் அது சாவர்க்கர் மட்டும் தான். சாவர்க்கர் பற்றி ராகுல் காந்திக்கு தெரியவில்லை என்றால் அவரது பாட்டி இந்திரா காந்தி என்ன சொல்லி இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்' என அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அமித்ஷா தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது 1980 ஆம் ஆண்டு மே மாதம் இருபதாம் தேதி இந்தியா காந்தி சார்பாக எழுதப்பட்ட கடிதத்தில் நமது சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியமான இடத்தை சாவர்க்கர் பிடித்துள்ளார் எனவும் இந்தியா நினைவு கூறும் சாவர்க்கர் பிறந்த நாளை கொண்டாடப்படும் திட்டங்கள் வெற்றியடைய வாழ்த்துகிறேன் எனவும் இந்திரா காந்தி கூறியுள்ளார். மேலும் 1966 ஆம் ஆண்டு சாவர்க்கருக்கு தபால்தலை இந்திரா காந்தி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி முன்னாள் பிரதமர் ஆன இந்திரா காந்தி சாவர்க்கரை பற்றி பெருமையாக கூறினார். ராகுல் காந்தியின் பாட்டியான இந்திரா காந்தி சாவர்க்கரை பற்றி பெருமையாக கூறிய தருணத்தில் அவரது பேரன் ராகுல் காந்தி சாவர்க்கரை பற்றி இழிவாக கூறியது எந்த விதத்தில் நியாயம்? என கேள்வி எழுப்பியுள்ளார். இப்படி ராகுல் காந்தியை பேசியது மேலும் காங்கிரசுக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தும் அதற்கு காங்கிரஸ் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட வேண்டும் என அமித்ஷா தரப்பில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் இதே சாவர்க்கரை வைத்து வரும் காலங்களில் ராகுல் காந்தி மீது விமர்சனங்கள் அதிகமாகும் எனவும் தெரிகிறது.