Kathir News
Begin typing your search above and press return to search.

தூத்துக்குடியில் அண்ணாமலை வைத்த செக் - ஆடிப்போன கனிமொழி

தூத்துக்குடியில் அண்ணாமலை வைத்த செக் - ஆடிப்போன கனிமொழி
X

Mohan RajBy : Mohan Raj

  |  3 April 2023 10:06 AM GMT

கனிமொழிக்கு வந்த தகவலால் அலறி அடித்துக் கொண்டு தூத்துக்குடி பறந்துள்ளார்.

இன்னும் ஒரு ஆண்டு காலத்தில் இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான தேர்தல் வரவிருக்கிறது, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அனைத்து அரசியல் கட்சிகளாலும் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கூற வேண்டும் என்றால் தற்போது தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் தரப்பில் உள்ளது, அதே சமயத்தில் அதிமுக-பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியாக அமைந்துள்ளன. வரும் தேர்தலில் எப்படியும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிவிடுவார் என கருத்துக்கணிப்பு முடிவுகள் மட்டுமல்ல கள நிலவரங்களும் இப்பொழுது கூறுகின்றன.

இந்த நிலவரம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்கு புரிந்து விட்டது, இது மட்டுமல்லாது தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தது ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஒபி ரவீந்திரநாத் அவர்கள் மட்டுமே வெற்றி பெற்றார். பாஜக கூட்டணிக்கு தேனி தொகுதி மட்டுமே கிடைத்தது. மற்ற 38 தொகுதிகளுமே திமுக கூட்டணி வசம் சென்ற இது பாஜகவுக்கு மிகப்பெரும் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.

தமிழகம் பெரியார் மண், தமிழகம் மோடியை ஏற்றுக் கொள்ளாது, தமிழகத்தில் மோடி எதிர்ப்பு என்பது மக்களின் எண்ணத்தில் ஊறியிருக்கிறது என இந்த வெற்றியின் மூலம் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களிடத்தில் இதனை கருத்தாகவே மாற்றினர். தமிழ் மக்களுக்கு மோடியை பிடிக்காது, தமிழகத்திற்கு தேவை தமிழக பாரம்பரியத்தை பின்பற்றக் கூடிய ஆட்சியாளர்கள் தான் என்கின்ற ரீதியில் இந்த வெற்றி குறித்து அவ்வபோது பரவலாக பேசப்பட்டது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறி உள்ளது, குறிப்பாக கூற வேண்டுமென்றால் தமிழகத்தில் பிரதமர் மோடி எதிர்ப்பு அலை என ஒன்று தற்போது இல்லாமலே போகிவிட்டது. மேலும் தமிழக மக்கள் பாஜகவிற்கு உறுப்பினர்களை கொடுக்கவில்லை என்றாலும் தமிழகத்திற்கு செய்ய வேண்டியவற்றை பிரதமர் மோடி சிறப்பாக செய்துவிட்டார் என்றே கூறலாம்.

சாலை வசதிகள், ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பல கிராமங்களுக்கும் குடிநீர், கொரோனா காலங்களில் வழங்கப்பட்ட இலவச ரேஷன் அரிசி, மோடி வீடு எனக் கூறப்படும் கிராமப்புற ஏழை எளிய குடிசை வாழ் மக்களுக்கு சிமெண்ட் வீடு, விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வருடத்திற்கு நிதி, மேலும் செல்வமகள் சிறு சேமிப்பு திட்டம் மூலம் வசதி இல்லாத பெண்கள் வருங்காலத்தில் படிப்பதற்கும் அவர்கள் திருமணத்திற்கும் வரும் செலவுகளை சமாளிக்க சேமிப்பு திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டம் இப்படி பல மத்திய அரசு திட்டங்களில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பயனாளர்கள் அதிகம் என அறிக்கை கூறுகிறது. அந்த அளவிற்கு தமிழகத்தில் பிரதமர் மோடி வழங்கிய திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மக்களுக்கு கொண்டு சேர்ந்துள்ளது, அதே சமயம் தமிழக பாஜக கடந்த 2019 தேர்தலை சந்தித்த பொழுது இருந்த பாஜக இப்பொழுது இல்லை கடந்த 2019 தேர்தலை சந்தித்தபோது தமிழக பாஜக இருந்ததை விட இப்போது ஐந்து மடங்கு அதிகமாகவே வளர்ந்து விட்டது.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் மாநில தலைவராக அண்ணாமலை பதவி ஏற்றதிலிருந்து தமிழக பாஜக தனது உட்கட்டமைப்பை மிகவும் விரிவு படுத்தி உள்ளது. மாவட்ட அளவிலும் சரி, நகராட்சி, ஊராட்சி அளவிலும் சரி பல நிர்வாகிகள் மட்டுமல்லாமல், பாஜகவிற்கு பல உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். மக்களிடையே ஒருபுறம் பிரதமர் மோடி மீதான ஈர்ப்பு, மறுபுறம் தமிழக பாஜக மீதான வளர்ச்சி என இரண்டுமே சேர்த்து பாஜக மக்களிடையே கிட்டத்தட்ட வளர்ச்சியை பெற்றுள்ளது.

தேசிய கட்சியில் தமிழகத்தில் பாஜகதான் முதல் இடத்தில் உள்ளது என்ற நிலையை எட்டிப் பிடித்துள்ளது. இப்படி இருப்பதனால் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்பிக்களுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டது, குறிப்பாக கூற வேண்டும் என்றால் திமுகவின் கனிமொழி கடந்த முறை தூத்துக்குடியில் நின்று வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை தூத்துக்குடியில் நின்றால் வெற்றி கிடைக்குமா என தெரியவில்லை என்ற அச்சத்துடன் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தூத்துக்குடி தொகுதி பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்த கனிமொழி தற்பொழுது தூத்துக்குடி தொகுதிக்கு விசிட் சென்றுள்ளார். திடீர் கனிமொழி தூத்துக்குடி விஜயத்திற்கு காரணம் தோல்வி பயந்தான் என கூறப்படுகிறது, ஏனெனில் இன்னும் ஓராண்டு காலத்தில் தேர்தல் வரவிருக்கிறது இந்த நான்கு ஆண்டுகளில் கனிமொழி தொகுதிக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை என்ற அதிருப்தி தூத்துக்குடி தொகுதி மக்களிடையே நிலவுகிறது என தகவல்கள் கூறுகின்றன. போதாக்குறைக்கு திமுக வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது எனத் தெரியாத நிலையிலேயே உள்ளது ஒருபுறம் காங்கிரஸ் மறுபுறம் மூன்றாவது கூட்டணி என இரு தரப்புக்கும் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இப்படி இருக்கும் பட்சத்தில் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் நின்றால் கண்டிப்பாக தோல்வியை தழுவுவார் என வெளிப்படையாகவே பேச்சுக்கள் எழுந்துள்ளன. மேலும் தமிழக பாஜகவும் தூத்துக்குடியை குறி வைத்து வேலை செய்து வருகிறது, சமீபத்தில் கூட தூத்துக்குடி சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு சாதாரண கூட்டத்தை மாநாடு போல் நடத்தி காட்டி விட்டு வந்தார். இதுவும் கனிமொழிக்கு பயத்தை ஏற்படுத்தியது இப்படி மோடி மீதான மக்களின் ஆதரவு, தமிழக பாஜகவின் விஸ்வரூப வளர்ச்சி இவை இரண்டும் சேர்த்து கனிமொழி தூக்கத்தை கெடுத்த காரணத்தினால் எப்படியாவது தூத்துக்குடி தொகுதியை நாம் 2024 தேர்தலில் மீண்டும் கைப்பற்றியாக வேண்டும் என பயத்தின் காரணமாகவே தற்போது கனிமொழி ஆய்வு செய்கிறேன். என்ற பெயரில் தூத்துக்குடி கிளம்பி சென்றுள்ளார். மேலும் எப்பொழுதும் செல்வது போல் இல்லாமல் இந்த முறை தூத்துக்குடியில் சென்று டீ குடிக்கிறேன் சாலையோரங்களில் ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் பெரும் அளவிலான விளம்பரங்களை கனிமொழி செய்து வருகிறார் எல்லாம் 2024 தேர்தல் தோல்வி பயந்தால் எனக் கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News