ஸ்டெர்லைட் ஆலையிடமிருந்து கனிமொழிக்கு பணம் சென்றதா? - திருச்சி சூர்யா சிவா அம்பலப்படுத்தும் தகவல்கள்!
By : Mohan Raj
'என்ன மேடம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் கம்பெனி'ல இருந்து நீங்களும் பணம் வாங்கினீர்களா' என திருச்சி சூர்யா சிவா கனிமொழியை கேட்ட விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்பொழுது ஸ்டெர்லைட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக, வெளிநாட்டு பணத்தில் போராட்டம் நடத்தப்பட்டதாக சிலர் ஸ்டெர்லைட் போராட்டம் நடந்த சமயம் கூறியிருந்தனர். ஆனால் இதற்கெல்லாம் சில எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். அதனை தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நம்பி வாழ்ந்து வந்த மக்கள் அனைவரும் எங்கள் வாழ்வாதாரமே போய்விட்டது என அடிக்கடி போராடி வருகின்றனர். இந்த நிலையில்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு அதை மூடி இருப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார்.
இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி இப்படி குறிப்பிட்டு உள்ளார். அவர் தனது பேச்சில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு அதை மூடி உள்ளனர். நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்தது ஸ்டெர்லைட் ஆலை. இப்படிப்பட்ட பெரிய ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர். வெளிநாடுகளில் இருந்துவரும் நிதிகள் பலவும் நமது நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளன, என்று ஆளுநர் ஆர்.என் ரவி குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ஆளுநர் ஆர். என் ரவிக்கு திமுக தூத்துக்குடி எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்தார். அதில், மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் ஆளுநரைக் கண்டிக்கிறேன். தன்னுடைய ஆதாரங்களைத் தரவேண்டும் ஆளுநர்பேச்சுக்கு , என்று கனிமொழி விமர்சனங்களை வைத்துள்ளார். ஆளுநரின் அரசியல் ரீதியான சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
இப்படி தமிழக அரசியலில் ஸ்டெர்லைட் விவகாரம் பெரிதும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் கனிமொழி ஆளுநரிடம் ஆதாரம் கேட்டதற்கு திருச்சி சூர்யா சிவா தனது ட்விட்டர் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதவியில் குறிப்பிட்டுள்ளதாவது, 'ஆட்சியை கையில் வைத்திருக்கும் நீங்கள் ஆளுநரையே ஆதாரம் தர வேண்டும் ஏன் கேட்கவேண்டும் நீங்களே வெளியிடலாமே! தங்களுக்காக திமுகவில் அப்பொழுது நான் பயணித்தேன், உங்களுக்காக நான் பாராளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தபோது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் துப்பாக்கி சூட்டை பற்றி எந்த இடத்திலும் பரப்புரை செய்ய வேண்டாம் என தாங்கள் எனக்கு கட்டளையிட்டதன் காரணம் என்ன? நீங்களும் அந்த கம்பெனியில் இருந்து பணம் வாங்கினீர்களா. அதிமுகவின் மிகப்பெரிய குற்றச்சாட்டாக சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை ஏன் பரப்புரையில் கூற வேண்டாம் என கூறினீர்கள்? அதற்குண்டான பதிலை கூறவும்' என கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுகவில் இருந்தவரையில் திருச்சி சூர்யா சிவா கனிமொழி ஆதரவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கனிமொழியை நீங்கள் ஸ்டெர்லைட் ஆலை இடம் பணம் வாங்கினீர்களா என திருச்சி சூர்யா சிவா கேட்ட விவகாரம் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கனிமொழி இதுவரை எதுவும் பேசாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
திருச்சி சூர்யா சிவா பாஜகவில் இருந்து தற்பொழுது முழு நேரமாக பணியாற்ற வில்லை என்றாலும் அண்ணாமலையின் ஆதரவாகவே கருத்துக்களை அகபோது தனது சமூக வலைதள பதிவுகளிலும் சரி யூடியூப் நேர்காணலிலும் சரி தெரிவித்து வருகிறார் தற்பொழுது இவர் ஸ்டெர்லைட் விவகாரத்தை மையமாக வைத்து கனிமொழி மீது கூறியுள்ள விவகாரமும் பாஜக ஆதரவு நிலைப்பாடு காரணமாகவே கூறியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கூறு தெரிவிக்கின்றனர் ஏற்கனவே ஸ்டெர்லைட் விவகாரம் அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகளை தற்பொழுது எழுப்பிய நிலையில் தமிழகத்தை ஆளும் திமுக கட்சியின் எம்பி ஒருவர் மீது பணம் வாங்கினீர்களா என்பது போன்ற சந்தேகத்தை திருச்சி சிவா எழுப்பியதும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
Source - Trichy soorya siva ட்வீட்