Kathir News
Begin typing your search above and press return to search.

தென்னிந்திய கிருஸ்துவ திருச்சபைகள் இப்போ மோடி பக்கம் - தட்டி தூக்கிய பிரதமரின் லேட்டஸ்ட் விசிட்!

தென்னிந்திய கிருஸ்துவ திருச்சபைகள் இப்போ மோடி பக்கம் - தட்டி தூக்கிய பிரதமரின் லேட்டஸ்ட் விசிட்!

Mohan RajBy : Mohan Raj

  |  13 April 2023 12:35 PM GMT

இனி கிறிஸ்தவ சமுதாயத்தின் வாக்கு வங்கி பிரதமர் மோடியின் பக்கம் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக கட்சி மதவாத கட்சி, பாஜக கட்சி இந்துக்களுக்கு மட்டுமேயான கட்சி, பாஜக என்பது ஆர்.எஸ்.எஸ் அரசியல் பிரிவு அதனால் இந்துக்களின் வளர்ச்சியை மட்டுமே முன்வைத்து இயங்கும் இயக்கம் என பல்வேறு கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் ஆர்எஸ்எஸ் மீதும், ஆர்எஸ்எஸ்'யின் அரசியல் பிரிவான பாஜகவின் மீது வைக்கப்பட்டு வந்தன. இதற்கு பின்னணியில் இடதுசாரிகளின் மர்ம பிரச்சார தந்திரம் தந்திரம் உள்ளது என பாஜக தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்பொழுது கிறிஸ்தவர்கள் பாஜகவின் பக்கம் அடி எடுத்து வைக்க துவங்கி விட்டனர், குறிப்பாக தங்களது கிறிஸ்தவ சமுதாயத்திற்கு, கிறிஸ்துவ மக்கள் முன்னேற்றத்திற்கு எதுவும் செய்ய முடியும் என்றால் அது பிரதமர் மோடியால் தான் முடியும், பாஜக என்ற கட்சியால்தான் நம்மை வாக்கு வங்கியாக பார்க்காமல் இந்திய குடிமகனாக பார்த்து திட்டங்களை செயல்படுத்த முடியும் என கிறிஸ்துவர்களின் நம்பிக்கை பாஜகவின் பக்கம் சாய்ந்துள்ளதாகவும் அதன் காரணமாக பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ சமுதாயத்தின் வலுவான வாக்கு சதவீதம் தற்பொழுது பாஜக பக்கம் சாய்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பாஜகவின் பெரும்பான்மையான தலைவர்கள் சர்ச்சில் சென்று கிறிஸ்துவ மத தலைவர்களை பார்த்ததும், கிறிஸ்தவ பத்திரியர்களை சந்தித்ததும் அரங்கேறியது. கிறிஸ்தவ மக்களிடையே பாஜக மீது ஏற்பட்டுள்ள தொடர்பு தற்பொழுது அதிகரித்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்புகளும் மற்றும் கேரள பாஜகவின் முக்கிய தலைவர்களும் கூறியுள்ளார்கள். அதாவது பிரதமர் மோடியின் உத்தரவின் படி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்துவர்களின் வீடுகளுக்கு பாஜகவின் தலைவர் சென்றுள்ளனர். மேலும் திருச்சபையின் பிஷப் இல்லங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பிரதமர் மோடியின் ஈஸ்டர் வாழ்த்துக்களை பாஜக பகிர்ந்து தலைவர்கள் பகிர்ந்து கொண்டதும் இதற்கு பின்னணியில் மோடியின் அதிரடி திட்டமும் உள்ளதாக தெரிகிறது.

இதில் முக்கியமாக கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் தன்னுடைய சொந்த மாவட்டமான கோழிக்கோடு பகுதியில் இரண்டு பிஷப்புகளை சந்தித்து பேசி உள்ளார். பிஷப்புகளிடம் பேசிய பிறகு பாஜகவின் இந்த முயற்சியால் கிறிஸ்துவர்களின் அதிக அளவு ஆதரவு கிடைத்து வருகிறதாகவும், பாஜகவினர் எதிர்பார்த்ததை விட கிறிஸ்தவர்கள் அதிக அளவில் பாஜகவிற்கு வரவேற்பு கொடுப்பதாகவும் மோடி தலைமையிலான அரசின் மீது கிறிஸ்துவர்களுக்கு தற்போது நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் சுரேந்திரன் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இது குறித்து கேரள பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் சொல்லும் பொழுது, 'கிறிஸ்தவ மத தலைவர்கள் மற்றும் கிறிஸ்துவ மக்களிடம் பாஜக மீது தற்பொழுது அணுகு முறையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது, பிரதமர் மோடி மற்றும் அவரது நிர்வாகம் மீது ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயம் நம்பிக்கை கொண்டிருப்பதாக பாஜகவில் கருதுகின்றனர். கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் வட கிழக்கு மாநிலங்களிலும், கோவாவிலும் நல்லாட்சி நடப்பதை அவர்கள் கண்டு தென்னிந்தியாவிலும் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு பிரதமர் மோடிக்கு ஓட்டு போட திருச்சபைகளிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டதும். இதனை கிறிஸ்தவர்கள் தற்பொழுது உணர துவங்கி விட்டதாகவும் கூறினார்.

இது தொடர்பாக கேரளா பாஜகவும் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது அதில், 'கிறிஸ்தவ சமுதாயத்தின் தலைவர்கள் தற்போது வெளிப்படையாகவே பாஜகவிற்கும், பிரதமர் மோடிக்கும் ஆதரவு தெரிவிக்க துவங்கிவிட்டனர். அவர்கள் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் கூட்டங்களிலும் சரி, அவர்களின் தனியான சந்திப்புகளிலும் சரி 'பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும்! நமக்கு இப்போது பாஜக முக்கியம்! நமது தேவைகள் பிரதமர் மோடியின் காதுகளுக்கு எந்த அளவுக்கு வேகமாக சொல்கிறதோ, அந்த அளவுக்கு வேகமாக நிறைவேற்றுகிறார்! எனவே பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என கிறிஸ்தவ மத தலைவர்கள் கிறிஸ்துவ திருச்சபைக்கு வரும் மக்களிடம் கூறி வருவதால் இடதுசாரி கட்சிகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதற்க்கு காரணம் இடதுசாரி கட்சிகளின் பெரும் வாக்கு வங்கியாக இருந்த கிறிஸ்தவ மதம் இப்பொழுது பாஜக பக்கம் சாய்ந்துள்ளதே!

பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் காரணமாக இப்பொழுது கிறிஸ்தவ சமுதாயமும் பாஜக பக்கம் இருக்கிறது,

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட தூத்துக்குடி மறை மாவட்டத்தை சேர்ந்த ஆயர் முதல்வர் ஸ்டாலினை நம்புவதை விட அனைத்து கட்சி தலைவர்களையும் நம்பலாம், குறிப்பாக அண்ணாமலையை நம்பலாம் என கூறியதும், இனி வரும் கிறிஸ்தவ பண்டிகளுக்கு ,முதல்வர் ஸ்டாலினை மட்டுமின்றி அனைவரையும் கூப்பிட வேண்டும் என கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News