அண்ணாமலை துவங்கிய ஆட்டம் - பின்தொடர்ந்து வரப்போகும் டெல்லி சிபிஐ!
By : Mohan Raj
இனி அடுத்த ஆட்டமே சி.பி.ஐ'யிடம்தான் என அண்ணாமலை அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார்.
திமுக ஆட்சி அமைத்த பிறகு திமுக மற்றும் பாஜகிடையிலான கருத்து மோதல்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தமிழக அரசின் பல துறைகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன் வைத்துக் கொண்டிருந்தார் இந்நிலையில் அண்ணாமலை தன் கையில் கட்டி இருப்பது வெளிநாட்டு வாட்ச் என்றும் அதன் மதிப்பு பல லட்சம் உடையது என்றும் திமுகவினர் விமர்சித்தனர். இதற்கு அண்ணாமலை இது வெளிநாட்டுவாச்சல்ல ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் தயாரிக்கப்பட்ட வாட்ச் என்று தெரிவித்திருந்தார். இதற்கும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த வாட்ச் வாங்கியதற்கான ரசீதை காட்டுமாறு அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பவே, இதற்கான ரசீதையும் நான் வெளியிடுகிறேன் விரைவில் திமுக கட்சியினர் செய்த ஊழல் பட்டியலையும் வெளியிடுகிறேன் என்று கூறியிருந்தார்.
கூறியதுபடியே ஏப்ரல் 14ஆம் தேதி திமுக அமைச்சர்கள் எம்பிகள் எம்எல்ஏக்களின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிட்டார். மேலும் மாநிலத் தலைவர் ஆன பிறகு 8 லட்சம் ரூபாய் மாதம் செலவாகிறது எனது வீட்டு வாடகையே எனது நண்பர்கள்தான் தருகிறார்கள். காவல் பணியில் இருந்த போது ரஃபேல் வாட்சில் லஞ்சக்கணத்தில் வாங்கியதாக திமுகவினர் கூறிய தகவல் பொய் என்பதை ரபேல் வாட்சில் ரசீதை காட்டி நிரூபித்தார். மேலும் இந்த வாட்சை மூன்று லட்சத்திற்கு என் நண்பரிடம் இருந்து 2021ல் மே மாதத்தில் பெற்றேன் என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து திமுக எம்பி ஜெயகத்ரட்சகன், அமைச்சர்களான வேலு, கே எல் நேரு திமுக எம்பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர் பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி அன்பில் மகேஷ், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் ஆகியோரின் சொத்து பட்டியல்களையும், குடும்பத்தினரின் சொத்து பட்டியல்கள் தொடர்பான மொத்த விவரங்களையும் ஒரு வீடியோ பதிவில் அண்ணாமலை வெளியிட்டார்.
மேலும் ரூபாய் 1.31 லட்சம் கோடி திமுகவின் சொத்து மதிப்பு என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு திமுகவைச் சேர்ந்த ஆர் எஸ் பாரதி இவர் கூறிய பட்டியலுக்கு தகுந்த ஆதாரங்களை பதினைந்து நாட்களுக்குள் அண்ணாமலை திமுக அலுவலகத்தில் ஒப்படைக்கவில்லை என்றால், அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் அவர் கூறிய சொத்து பட்டியல்கள் தவறு என்றும் அதன் நிரூபிக்கும் விதமாக எந்த ஒரு ஆதாரத்தையும் திமுகவினர் முன்வைக்கவில்லை. மேலும் அவர் கூறியது தவறான பட்டியலாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம் ஆனால் அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டு 24 மணி நேரமாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிபிஐயில் அப்பாயின்மெண்டுக்காக காத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார், அதாவது வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சிபிஐயிடம் இருந்து அப்பாயின்மென்ட் வந்ததும் நான் சேகரித்த புகார் மற்றும் கோப்புகளை எல்லாம் சிபிஐயிடம் ஒப்படைத்து புகார் கொடுப்பேன் என்று கூறியுள்ளார், மேலும் ஊழல் செய்த பணத்தை திமுக வக்கீலுக்கு கொடுக்க நினைத்தால் நிச்சயமாக வழக்கு தொடுக்கட்டும் ஏன்னா சாராயத்தில் கொள்ளையடித்த பணத்தை எதுலயாவது செலவு செய்ய வேண்டும் அல்லவா, மேலும் அவர் வைத்திருந்த அனைத்து சான்றிதழ்களுமே ஆதாரப்பூர்வமாக கம்பெனி பெயரோடு தான் குறிப்பிடப்பட்டுள்ளது,
ரெட் ஜெயன்ட் மூவி ஷோ நோபல் ஸ்டீலோ பெஸ்ட் பேங்க் குற்றச்சாட்டோ, CMRL ஊழல் விவகாரமும் இதில் எதையாவது ஒரு விஷயத்தை மறுக்கட்டுமே பார்க்கலாம் நானும் யாருக்கும் அஞ்சுவதாக இல்லை, சொத்து பட்டியலை வெளியிட்டு 24 மணி நேரம் முடிந்துள்ளது அடிப்படையா ஒரு குற்றச்சாட்டை கூட மறுக்க முடியல என்று பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக கூறியுள்ளார்.
அண்ணாமலை தற்போது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையில் திமுக அரசின் ஊழல் வழக்கை பதிவு செய்வேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே கனிமொழி மற்றும் ஆர் ராசாவின் வழக்குகள் சிபிஐ மற்றும் அமலாக்க துறையில் சேர்ந்துள்ளது இதில் அண்ணாமலை மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தால் சிபிஐ இந்த புகாரில் வேகமாக நடவடிக்கை எடுக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.