Kathir News
Begin typing your search above and press return to search.

சிபிஐ வசம் சிக்கிய முக்கிய ஆவணங்கள் - இனி சிபிஐ ஆடப்போகும் ரைடு தாண்டவம்!

சிபிஐ வசம் சிக்கிய முக்கிய ஆவணங்கள் - இனி சிபிஐ ஆடப்போகும் ரைடு தாண்டவம்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  18 April 2023 12:35 PM GMT

அண்ணாமலை வெளியிட்ட புகாரின் காரணமாக சிபிஐ தமிழகத்தில் தொடர்ச்சியாக சம்மன் அனுப்பும் என்ற அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் பல சர்ச்சைகளை மட்டுமல்லாது பல விவாதங்களை முன்வைத்து வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை, திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் 27 பேரின் சொத்து பட்டியல், தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். தாம் வெளியிடும் தகவல்களை தமிழ் மக்கள் புத்தாண்டாக கொண்டாடுவார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

அதன்படி, ஏப்ரல் 14-ம் தேதி காலை 10.15 மணியளவில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்து பட்டியல் ஆவணங்களை அண்ணாமலை வெளியிட்டார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், மைத்துனர் கலாநிதி மாறன் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துப் பட்டியல் மற்றும் தி.மு.க. அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, துரைமுருகன், பொன்முடி, அன்பில் மகேஸ், எம்.பி.க்கள் கனிமொழி, ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டார். இதன்படி, தி.மு.க.வின் சொத்து மதிப்பு 1,31,000 கோடி ரூபாய் என்று அண்ணாமலை தெரிவித்தார் அதனை தொடர்ந்து, அண்ணாமலை அவர் கட்டியிருக்கும் ரஃபேல் கைக் கடிகாரத்தின் பில்லையும் வெளியிட்டார். தொடர்ந்து, அ.தி.மு.க தலைவர்களின் சொத்துப் பட்டியலும் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

அண்ணாமலை தற்பொழுது வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து அனைத்து கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் வரிசையாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கூறிய கருத்து ஒன்று அனைவராலும் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது. தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, 'அண்ணாமலையை இவர்கள் அனைவரும் காமெடியாகவும், கோமாளியாகவும், மக்கு மலை என்றும் பேசிக் கொண்டிருக்கின்றனர்! ஆனால் அண்ணாமலை என்பவர் அண்ணாமலை கிடையாது அவர் ஒரு மாஸ்க், அண்ணாமலை பின்னணியில் உள்ளது ஆர் எஸ் எஸ். இது எல்லாம் அவராக தயார் செய்து சொல்வதற்கு அவர் ஒன்றும் முட்டாள் கிடையாது அவர் ஒரு ஐபிஎஸ் ஆபிசர், படித்தவர், சர்வீஸில் இருந்தவர். இப்பொழுது இந்த விவகாரத்தை முன் வைத்துள்ளார்.

ஒரு விவாதத்திற்கு வைத்துக் கொள்வோம் இந்த சொத்து பட்டியலை அண்ணாமலை வரும் வாரங்களில் சிபிஐ'யிடம் கொடுக்கிறார், சிபிஐ திமுக குடும்பத்தில் இருக்கும் சிலருக்கு சமன் அனுப்புகிறது. விசாரணைக்கு வர வேண்டும் என அழைப்பது கூட நடக்கும். அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணைக்கு அழைத்தவர்கள் தானே இவர்கள். வரிசையாக தொடர்ச்சியாக ஆறு மாத காலம் திமுகவில் இருக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் மற்றும் ஒவ்வொரு அமைச்சர்களாக இவர்கள் விசாரணைக்கு அழைத்து வந்தால் என்னவாகும் நினைத்துப் பாருங்கள் தொடர்ச்சியாக ஆறு மாத காலம் இவர்கள் விசாரணையில் சிக்கினால் திமுக செய்யும் எல்லாவற்றையும் அவர்கள் எடுத்து விடுவார்கள் சிபிஐ, அந்த அளவிற்கு பின்னணிகள் திட்டங்கள் இருப்பதாக தெரிகிறது எனவே நீங்கள் வேண்டுமானால் சமூக வலைதளங்களில் உங்கள் ஆசைக்காக அண்ணாமலையை கிண்டல் செய்து கொள்ளலாம் ஆனால் அண்ணாமலை என்பவர் தனியாள் கிடையாது, எனவே இந்த விவகாரத்தை திமுக சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது' என எச்சரித்துள்ளார். இந்த விவகாரம் தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அண்ணாமலை வரும் வாரங்களில் நான் வெளியிட்ட திமுகவின் சொத்து ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க போகிறேன் எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது. சிபிஐ இதனை கண்டிப்பாக ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் என்கின்ற முறையில் மதிப்பளித்து குறைந்தபட்சம் சம்மன் கூட அனுப்பலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி தகவலின் படி சிபிஐ சம்மன் அனுப்பினால் நோபல் ஸ்டீல் கம்பெனி விவகாரத்தில் உதயநிதி வேலை செய்தது, துபாய் சுற்றுப்பயணம் செய்து 1000 கோடி ரூபாய் முதலீடு செய்த விவகாரம் அனைத்தும் பூதாகரமாக வெடிக்கும் என தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News