கலைகிறதா திமுக அரசு - வெளிவந்த பரபர தகவல்!
By : Mohan Raj
திமுக அரசு கலைய போகிறது என அதிரடி தகவல் வெளிவந்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலை கையில் கட்டி இருந்த ரப்பேல் வாட்சை பற்றி விமர்சித்து அதன் ரசீதை காட்டுமாறு கேட்டார் அதற்கு பிறகு அண்ணாமலை எனது ரஃபீல் வாட்சுடன் திமுக கட்சியின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவதாக அறிவித்தார், அதன்படியே ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவின் சொத்து பட்டியலையும் விரைவில் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அறிவித்தார். அதன்படி ஜெயகத்ரட்சகன் எ.வே வேலு, கே என் நேரு, கனிமொழி, கலாநிதி மாறன், டி ஆர் பாலு கதிர் ஆனந்த், கலாநிதி வீரசாமி, அன்பில் மகேஷ் மற்றும் முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் சொத்து விவரங்களை வெளியிட்டார் அண்ணாமலை. ஸ்டீல் நிறுவனத்திடம் இவர்களுக்கு இருக்கும் தொடர்பையும் வெளிப்படுத்தினார்.
இதற்கு திமுகவினர் எந்த ஒரு விளக்கத்தை கொடுக்கவில்லை என்றாலும் ஆர் எஸ் பாரதி, முதலமைச்சரையும் மற்ற முக்கிய தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் நற்பெயர்களை களங்கப்படுத்துவதற்கு முயற்சி செய்து வருகிறீர்கள் பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை தான் பேசிய அனைத்து பேச்சுகளுக்கும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் இழப்பீடு தொகையாக ரூபாய் 500 கோடி தர வேண்டும் இதனை 48 மணி நேரத்திற்குள் செய்ய தவறினால் உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என்று கூறினார்.
ஆர் எஸ் பாரதி கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக யார் என்ன கூறினாலும் சட்டத்தை கூறி மிரட்டினாலும் அதற்கு பயப்பட மாட்டேன் என்று திமுகவினரின் சொத்து பட்டியல் தொடர்பாக வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சிபிஐ மற்றும் அமலாக்க துறையிடம் நேரடியாக புகார் அளிக்க இருக்கிறேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், சிபிஐயின் அப்பாயின்மெண்டுக்காக மட்டுமே காத்திருக்கிறேன் கிடைத்ததும் அனைத்து கோப்புகளின் கொண்டு போய் ஒப்படைத்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். ஊழல்களை வெளிப்படையாக எடுத்துக் கூறினால் மட்டுமே பாஜக மீது நம்பிக்கை ஏற்படும் என்றும் அதனால் அனைத்து ஊழல் பற்றிய விவரங்களையும் சிபிஐ மற்றும் அமலாக்க துறையிடம் ஒப்படைத்து தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் தனது நிலையை நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கோவையில் நேற்று ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்து கொண்ட பாஜக முன்னால் தேசிய செயலாளர் எச் ராஜாவை சந்தித்த செய்தியாளர்களிடம் அவர் கூறியது, PFI உள்ளிட்ட எட்டு அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது இந்த தடைக்கு அடுத்த நாள் தமிழ்நாட்டில் சீமான் திருமாவளவன் ஆகியோர் மனித சங்கிலி நடத்த காவல்துறை அனுமதித்தது, இந்த PFI தேசத்துரோகிகள் அதனால் தான் அவர்களுக்கு தடை செய்யப்பட்டது ஆனால் இவர்கள் அனைவருமே ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தொடர்ந்து தடை விதித்து வந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றமே அனுமதி கொடுக்க அறிவுறுத்தியும் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் காசு கொடுத்து தடை விதிக்க வேண்டும் என்று போராடினார், உண்மையை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் அதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறியது. தமிழகத்தில் காவல்துறை மற்றும் அரசாங்கம் இரண்டுமே பிரிவினை வாத தீய சக்திகளாக குறிப்பிடப்படுகிறது, பழனியில் காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதலை நடத்தி ரவுடித்தனமான செயல்களை செய்துள்ளனர் அந்த தீய சக்திகளை செயல்பட அனுமதித்து விட்டு தேசத்தையே பக்தியாக கொண்டு செயல்படும் சக்திகளை நசுக்க பார்க்கிறீர்கள் இனிமேலும் ஆர்எஸ்எஸ் பேரணியை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார்
இதற்கு அடுத்ததாக, திமுகவின் சொத்து பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது, ஒருவேளை அண்ணாமலை சொல்லியது அனைத்தும் பொய் என அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்றால் 17 பேரும் நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்யட்டும் இந்த சொத்துக்கள் எதுவும் எங்களுடையது இல்லை என, தொடர்ந்து இவர்கள் ஆளுநரை பற்றி தவறான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் ஆளுநர் தன் கையில் தகவலையும் தரவுகளையும் இருக்கிற காரணத்தினாலே அவர் பேசுகிறார், இதற்கு மேல் ஸ்டாலின் ரொம்ப பேசினால் அவரது அரசாங்கம் தான் பறிபோகி விடும் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை சிபிஐ வசம் இந்த சொத்துப்படியலை கொடுத்து அவர்கள் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் விரைவில் திமுகவின் அரசாங்கம் கலையும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.