Kathir News
Begin typing your search above and press return to search.

இனிமே எங்கேயாவது பேசினா அவ்ளோதான் - அறிவாலயத்திலிருந்து அமைச்சர் நாசருக்கு மிரட்டல்!

இனிமே எங்கேயாவது பேசினா அவ்ளோதான் - அறிவாலயத்திலிருந்து அமைச்சர் நாசருக்கு மிரட்டல்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  20 April 2023 7:08 PM IST

சர்ச்சைக்கு பேர் போன திமுக அமைச்சர் தற்போது திமுக எம்பிக்களை பற்றி சர்ச்சையாக கூறிய விவகாரம் அறிவாயாலத்தில் உடன்பிறப்புகள் மத்தியில் மீண்டும் அடிதடி ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அமைச்சர் நாசர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர், முதல்வர் ஸ்டாலின் என்னால் தூங்கமுடியவில்லை விடிந்தால் என்ன பிரச்சினை வருமோ என பயந்துகொண்டே படுக்கைக்கு செல்கிறேன் என கூறும் அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தும் அமைச்சர்களில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் முக்கியத்துவம் வாய்ந்தவர். அமைச்சர் நாசர் இதுவரையில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அமைச்சர் ஆனது வரை ஏதாவது நல்லது செய்து மக்கள் மத்தியில் பெயர் வாங்கினதை விட சர்ச்சைகளில் மாட்டி அதிகம் அவரது பெயர் செய்திகளில் அடிபட்டது தான் இவரது சாதனையாக பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு திமுகவின் அமைச்சர் நாசர் என்றாலே சர்ச்சைகள் என்ன பொருள்.

கடந்த சில நாட்கள் முன்பு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருகை தந்த, அமைச்சர் நாசரின் காலணிகளை, அவரது உதவியாளர் ஒருவர் கையில் எடுத்துச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது, சமூகநீதி அரசு, அனைத்து மக்களுக்கான அரசு என பேசிவரும் முதல்வர் ஸ்டாலினின் அமைச்சாரவையில் உள்ள அமைச்சர் நாசர் இப்படி ஆளை வைத்து செருப்பை தூக்கி செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மற்றுமொரு சம்பவமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருவள்ளூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அமைச்சர் நாசர். அப்போது, நாற்காலி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், ஆவேசம் அடைந்த அமைச்சர் நாசர்,கல்லை தூக்கி திமுக தொண்டரை அடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

அதற்க்கு முன் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகர் பகுதியில் உள்ள ஏஜி தேவாலயத்தின் 40 ஆண்டு துவக்கவிழா கொண்டாட்டத்துக்கு சென்ற அமைச்சர் நாசர், 'கிறிஸ்துவர்களின் வலிமையான ஜெபத்தால் தான், இன்று தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது' என கூறி சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். பின்னர் அவரது தரப்பில் அவரே அதற்க்கு பத்திரிகையாளர்களை அழைத்து வேறு கொடுத்தார்

இப்படி திமுகவில் சர்ச்சைகளில் சிக்கும் திமுக அமைச்சர்களை பட்டியலிட்டால் முதல் ஐந்து இடத்தில் நாசர் கண்டிப்பாக வருவார் அந்த அளவிற்கு நாசர் சர்ச்சைக்கு பெயர்போனவர் தற்பொழுது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் புனல் பகுதியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பால் பலத்துறை அமைச்சர் நாசர் திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜெயக்குமாரை புகழ்ந்து பேசுவதாக நினைத்துக்கொண்டு மற்ற திமுக எம்.பிக்களை கடுமையாக விமர்சித்தார். திருவள்ளுவர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மட்டும் நாடாளுமன்றத்தில் கேள்வி மேல் கேள்விகள் கேட்டு மத்திய அரசை மிரள வைப்பதாகவும் மற்ற எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தூங்கி விட்டு வருவதாகவும் பொருள்படும்படி பேசினார். அவரது தொகுதி எம்பி புகழ்ந்து பேசுகிறேன் என்ற பெயரில் அதுவும் காங்கிரஸ் எம்.பியை புகழ்ந்து பேசுகிறேன் என்ற பெயரில் திமுக எம்.பிக்கள் தூங்கிவிட்டு வருகின்றனர் என அமைச்சர் நாசர் கூறியது தற்போது அமைச்சர் நாசர் மீது திமுக எம்பி களுக்கு கடும் கோபத்தை எழுப்பிவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அறிவாலயத்தில் இருந்து திமுக அமைச்சர் நாசருக்கு கூப்பிட்டு டோஸ் விடப்பட்டதாக அறிகிறது எங்கேயாவது செல்லும் இடத்தில் ஏதாவது வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் இதுபோன்று பேசுவது கட்சிக்குதான் பின்னடைவை ஏற்படுத்தும் எனவே இது போல் செய்யக்கூடாது என அறிவாலய தரப்பிலிருந்து கடிந்து கொண்டதாக தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News