Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தாள வச்சுகிட்டு தலைவலிதான் - தூக்கி அடிக்கப்படும் பிடிஆர்

இந்தாள வச்சுகிட்டு தலைவலிதான் - தூக்கி அடிக்கப்படும் பிடிஆர்
X

Mohan RajBy : Mohan Raj

  |  23 April 2023 11:03 AM IST

நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜரின் பதவி பறிக்கப்படுகிறது என தகவல் கிடைத்துள்ளது.

அண்ணாமலை வெளியிட்ட திமுக ஒன்னரை லட்சம் கோடி ரூபாய் சொத்து பட்டியல் குறித்த பரபரப்பு அடங்குவதற்குள் திமுகவின் அமைச்சரவையில் இருந்தே நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, அந்த ஆடியோவில் உதயநிதியும், சபரீஷனும் திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டிற்குள் தங்கள் வருமானத்தை விட அதிக பணத்தை ஈட்டி உள்ளனர் இப்போது அது ஒரு பிரச்சினையாகி வருகிறது, உதயநிதியும், சபரீசனும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சம்பாதித்து வைத்துள்ளனர் அதை எப்படி கையாளுவது, கணக்கு காட்டுவது என தெரியாமல் தவித்து வருகின்றனர் என பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஒரு பத்திரிகையாளரிடம் கூறும் ஆடியோ வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த ஆடியோவை மூத்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் வெளியிட்டதை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேறு, 'பாருங்கள் நான் வெளியிட்ட ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்து பட்டியல் மட்டுமல்ல முப்பதாயிரம் கோடி ரூபாய் வேறு பணத்தை சேர்த்து வைத்திருக்கிறார்கள் இந்த தகவலை வேறு யாரும் அல்ல திமுகவின் அமைச்சரவையில் இருக்கும் நிதியமைச்சர் கூறுகிறார். அந்த அளவிற்கு இருக்குறது திமுகவின் ஆட்சி' எனவும் கூறினார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது, இந்த ஆடியோ பதிவு வெளியானது முதல் திமுகவின் சக அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும் மேல்மட்டத்தில் உள்ள அனைவரின் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஆடியோவில் உள்ளபடி அமைச்சர் தியாகராஜன் பேசியது உண்மைதானா? அவருடைய குரல் தானா என முதலில் சந்தேகங்களை எழுப்பிய திமுகவினர் பின்னர் தங்களுக்கு வேண்டியவர்களிடம் அந்த ஆடியோ பதிவை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டனர். அமைச்சர் தியாகராஜன் சபரீசன் உறவினர் என சொல்லப்படுகிறது ஆனால் அவரைப் பற்றி தியாகராஜன் அப்படி பேசியிருப்பாரா? அப்படியே பேசினாலும் அந்த உரையாடலின் ஆரம்பம் என்ன முடிவு என்ன என்பது தற்பொழுது வெளியாகவில்லை என திமுகவில் தற்போது பல கேள்விகள் எழுந்து வருகின்றது. இது எல்லாவற்றிற்கும் மேலாக ஆடியோ வெளியானது முதல் அந்த ஆடியோவை பற்றி இதுவரையில் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் எந்த கருத்தும் கூறாமல் அமைதியாக இருந்து வருவதும் இந்த ஆடியோவை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்த நிலையில் பாஜக மேலிடத்திற்கு நெருக்கமான சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ஒருவரை ஆளும் கட்சியின் முக்கிய புள்ளி தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார் ஆனால் அந்த முக்கியப்புள்ளி ஆடிட்டர் தவிர்த்து விட்டதாக பாஜக வட்டாரத்தில் தகவல் கூறப்படுகிறது, மேலும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டு நிதியமைச்சராக தங்கம் தென்னரசு மாற்றப்படுவார் என்ற மற்றொரு தகவலும் ஆளுங்கட்சி வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்து அடுத்த சட்டப் பேரவை கூட்டத்துடன் மே இரண்டாம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஒரு வார காலத்தில் இதற்கு உண்டான வேலைகள் அனைத்தையும் திமுக மேலிடம் செய்யும் எனவும் அமைச்சர் தியாகராஜன் மாற்றப்படுவது உறுதி எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த ஆடியோ வெளியானதை தொடர்ந்து அடுத்த கட்ட பட்டியலை விரைவில் வெளியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தகட்ட சொத்து பட்டியல் வெளியிடும்பொழுது அதில் இதுவரைக்கும் வெளிவராத திமுகவில் இருக்கும் முக்கிய அமைச்சர்களின், தலைவர்களின் பெயர்கள் வெளிவரும் எனவும் அவர்களின் சொத்து பட்டியல் விலாவாரியாக அதில் இருக்கும் எனவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் வெளியான தகவல் மற்றும் ptr ஆடியோ விவகாரம் இவை அனைத்தும் சேர்த்து அறிவாலயத்தை ஆட்டம் காண வைத்திருக்கும் நிலையில் அண்ணாமலை வேறுபட்டியில் வெளியிடப் போகிறார் என்பது வேறு பல திமுக தலைவர்களுக்கு தூக்கம் இல்லாமல் செய்து வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News