Kathir News
Begin typing your search above and press return to search.

மாட்னாருய்யா பிடிஆரு - ஆடியோ டேப் விவகாரத்தில் பி.டி.ஆர் சிக்கியதற்கு குத்தாட்டம் போடும் திமுக மூத்த அமைச்சர்கள்

மாட்னாருய்யா பிடிஆரு - ஆடியோ டேப் விவகாரத்தில் பி.டி.ஆர்  சிக்கியதற்கு குத்தாட்டம் போடும் திமுக மூத்த அமைச்சர்கள்
X

Mohan RajBy : Mohan Raj

  |  25 April 2023 6:10 AM IST

பி டி ஆர் ஆடியோ விவகாரம் வெளியாகிய முதல் திமுகவில் இருக்கும் பிற அமைச்சர்கள் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்து, கிட்டத்தட்ட 60 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் இந்த அளவிற்கு சொத்து குவித்ததாக எந்த கட்சியும் பெயர் எடுத்தது கிடையாது, அந்தப் பெயரை திமுகவிற்கு அண்ணாமலை தற்பொழுது வாங்கிக் கொடுத்துள்ளார். குறிப்பாக அண்ணாமலை தகுந்த ஆதாரங்களுடன் எவ்வளவு ரூபாய் யார் யார் பேரில் உள்ளது? அது எந்த வகையான சொத்தாக உள்ளது? எங்கு இருக்கிறது? எந்த நாட்டில் இருக்கிறது அதன் மதிப்பு எவ்வளவு என துல்லியமாக வெளியிட்ட விவகாரம் தான் தற்பொழுது தமிழக அரசியலையே புரட்டிப் போட்டு வருகிறது.

இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட்ட புகார் பற்றிய பரபரப்பு அடங்குவதற்குள், அண்ணாமலை என்ன அண்ணாமலை நான்தான் பெரிய மலை என என்கின்ற ரீதியில் வெளியான நிதியமைச்சர் பி.டி.ஆர் ஆடியோ தான் தமிழக அரசியலில் எரிமலையாக வெடித்துள்ளது. குறிப்பாக இந்த ஆடியோ வெளியான பிறகு தான் அறிவாலயம் ஆட்டம் கண்டது என அனைவரும் கூறும் அளவிற்கு ஓர் ஆடியோ வெளியானது, அதுதான் பி டி ஆர் ஆடியோ. உதயநிதியும் சபரிசனம் கிட்டத்தட்ட முப்பதாயிரம் கோடி ரூபாய் வரை சேர்த்து வைத்துள்ளார்கள், இது அவங்க தாத்தா காலத்திலேயே இந்த அளவுக்கு சேர்த்தது கிடையாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அந்த பணத்தை இப்போது சேர்த்து வைத்து எங்கு முதலீடு செய்வது? எப்படி பதுக்குவது? என தெரியாமல் விழி பிதுங்கி வருகின்றனர். நல்லவேளை நமக்கு அந்த தொந்தரவு இல்லை' என நிதியமைச்சர் பி.டி.ஆர் அசால்டாக பத்திரிகையாளர் அவர்களிடம் கூறும் அந்த ஆடியோ வெளியானது முதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் வெளிவந்து கிட்டத்தட்ட மூன்று தினங்கள் கடந்த பிறகும் இந்த விவகாரம் தரப்பொழுது தமிழக அரசியல் இன்னும் சூடு குறையாமல் இருந்து வருகிறது இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆடியோ விவகாரத்தில் சிக்கிய காரணத்தினால் திமுகவின் மற்ற அமைச்சர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்ற சில தகவல் விசாரித்த பொழுது நல்ல வேலை பி.டி.ஆர் மாட்டினார், மாட்டட்டும் இதுதான் நமக்கு நல்லது என சந்தோஷமாக இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தனியார் யூ ட்யூப் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, 'நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ரொம்ப ஆணவம் பிடித்த ஆள், அவர் மற்ற அமைச்சர்களை மதிக்க மாட்டார் இன்னும் சொல்லப்போனால் முதல்வரின் மருமகன் சபரீசனும், பி.டி.ஆரும் உறவினர்கள் ஒருவகையில் பார்த்தால் முதல்வர் ஸ்டாலினுமே பி.டி..ஆர் ஆகிய இருவரும் உறவினர் என்ற முறையில் தான் வருவார்கள். அந்த வகையில் தான் அயல்நாட்டில் படித்தவன், பெரிய பெரிய வங்கிகளில் வேலை செய்தவன், டன் கணக்கில் பணத்தை ஹேண்டில் செய்திருக்கிறேன், எவ்வளவு பெரிய வங்கிகளுக்கெல்லாம் நான் பட்ஜெட் போட்டு இருக்கிறேன், இந்த நான் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளேன் என்பது போன்று மிகவும் ஆணவமாக பேசுவார். ஆனால் அதெல்லாம் பொய் அவரது துறையில் இருந்து செல்லும் அனைத்து கோப்புகளுக்கும் குறிப்பிட்ட அளவு சதவீதத்தை தான் அவர் கமிஷனாக பெற்றுக் கொண்டு வருகிறார்.

மேலும் இதனை எல்லாம் கவனிக்க இலக்குவன் என்ற உதவியாளர் இருக்கிறார் என்ற தகவலையும் போட்டு உடைத்தார், இப்படி உதவியாளர் வைத்துக்கொண்டு கோடி கோடியாக பணத்தை அடிக்கும் உங்களுக்கு எதுக்கு சமூக நீதி, மக்கள் சேவை, திராவிடம் மாடல் ஆட்சி என்ற பெயரெல்லாம் இதெல்லாம் தேவையில்லாத ஒன்று! என பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை பற்றி சவுக்கு சங்கர் விமர்சித்தார்.

மேலும் ஒரு குறிப்பிட்ட தகவலையும் சவுக்கு சங்கர் பகிர்ந்து கொண்டார். அது என்னவென்றால் பிடிஆர் இப்படி சிக்கிய விஷயம் மற்ற அமைச்சர்களை குறிப்பாக திமுகவின் மூத்த அமைச்சர்கள் 'மாட்னாண்டா' என்கின்ற வகையில் சந்தோஷமாக இருக்கின்றனர், ஏற்கனவே தலைவலி புடிச்ச ஆளு பி.டி.ஆர் போனா நல்லது தான் என்கின்ற வகையில் பல அமைச்சர்கள் இருக்கின்றனர் காரணம் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் எந்த அமைச்சரை மதிப்பது கிடையாது இதுதான் காரணம், இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இது போன்ற ஆடியோவில் சிக்கியது பல திமுக மூத்த அமைச்சர்கள் மத்தியில் 'ஆணவத்தில் இருக்கும் பி டி ஆர் க்கு இதெல்லாம் தேவைதான்' என்கின்ற ரீதியில் கருத்து கூறி வருகின்றனர் என்று கூறினார்.

மூத்த அமைச்சர்கள் பி.டி.ஆர் மாட்டினார் என சந்தோசமாக இருப்பது பி டி ஆர் தரப்பை மேலும் சோகமாக்கி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News