Kathir News
Begin typing your search above and press return to search.

அப்பனும், மகனும் மொத்தமா வசூலை வாரி குவிக்குறாங்க - வெளியான பிடிஆர் புதிய ஆடியோ

அப்பனும், மகனும் மொத்தமா வசூலை வாரி குவிக்குறாங்க - வெளியான பிடிஆர் புதிய ஆடியோ
X

Mohan RajBy : Mohan Raj

  |  26 April 2023 7:08 AM IST

பரபரப்பான தமிழக அரசியலில் தற்பொழுது அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜனின் அடுத்த ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த தமிழ் புத்தாண்டு அன்று அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவகாரத்தை தொடர்ந்து அடுத்தபடியாக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது அதில் முப்பதாயிரம் கோடி ரூபாய் வரை பணத்தை முதல்வர் ஸ்டாலின் என் மகனும், அமைச்சருமான உதயநிதியும், முதல்வர் மருமகன் சபரீசனும் சேர்த்து வைத்துள்ளனர் என்ற தகவலை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அதில் கூறியிருந்தார். இந்த நிலையில் விரைவில் அடுத்த ஆடியோ வெளியாகும் என அண்ணாமலை கூறி வந்தார்.

அதனை அடுத்து தற்பொழுது இரண்டு நாட்களாக வருமானவரித்துறையினர் திமுக எம்எல்ஏ மோகன் வீடு மற்றும் ஜீ ஸ்கொயர் நிறுவனத்தில் அதிரடி ரைடு நடத்துவரும் நிலையில் அடுத்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவிலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை பற்றி பேசியுள்ளார், என்னவென்றால், 'நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஒரு நபருக்கு ஒரே பதவி என்ற கொள்கையை ஆதரித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்குப் பிடித்தது இதுதான். கட்சி மற்றும் மக்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்புகளும் தனித்தனியே இருக்கவேண்டும். இங்கு எல்லா முடிவுகளையும் எம்எல்ஏகளும் அமைச்சர்களும் தான் எடுக்கிறார்கள்.

நிதி மேலீண்மை செய்வது சுலபமாக இருக்கும். இது ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அத்தனையையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். முதல்வரின் மகனும் மருகனும்தான் கட்சியே...

அவர்களையே நிதி மேலாண்மை செய்யச் சொல்லுங்கள்... அதனால்தான் 8 மாதம் பார்த்துவிட்டு, நான் முடிவு செய்தேன். இது ஒரு நிலையான வழிமுறை அல்ல. எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால், இப்போது நான் விலகினால்... இந்தக் குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால் அவர்கள் செய்தது அனைத்தும் எதிர்வினையாக அவர்களையே திருப்பி அடிக்கும். நான் இதை எப்படிச் சொல்வது... இந்தப் போராட்டத்தை நான் மிக சீக்கிரம் கைவிட்டுவிட்டதாக என் மனசாட்சி சொல்லாது எனக் கருதுகிறேன்'

என பிடிஆர் பேசும் அந்த ஆடியோ வெளியாகி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பனும், மகனும், மருமகனும் சேர்ந்து தான் கட்சியே, எல்லா ஊழல் பணத்தையும் எடுத்துக் கொள்கிறார்கள் என முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, மற்றும் முதல்வர் மருமகன் சபரீசனை பற்றி பி டிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறிய ஆடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனை அண்ணாமலை வெளியிட்டது தற்பொழுது திமுகவினருக்கு மேலும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது அது மட்டுமல்லாமல் நிதியமைச்சர் பி.டி ஆர். பழனிவேல் தியாகராஜன் மீதுள்ள முதல்வர் குடும்பத்தின் கோபத்தை இந்த ஆடியோ மேலும் அதிகமாக்கும் எனவும் தெரிகிறது.


ஏற்கனவே நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான 30000 கோடி ரூபாய் விவகாரம் தொடர்பாக அதில் வந்த குரல் எனது இல்லை என பி டி ஆர் கூறிவந்த நிலையில் தற்பொழுது அடுத்த ஆடியோ வெளியாகி இருப்பது பி டி ஆர் தரப்பை மேலும் அதிர்ச்சி உள்ளாகியுள்ளது. ஏற்கனவே முதல் ஆடியோவை வெளியிட்ட மூத்த பத்திரிக்கையான சவுக்கு சங்கர் இது பி டி ஆர் உடைய ஆடியோ பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் குரல் தான் என்னால் எங்கு வந்து வேண்டுமானாலும் சொல்ல முடியும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை சந்திக்க தயார் என சவால் விட்டிருந்தார் இந்த நிலையில் அண்ணாமலை அடுத்த ஆடியோவை அனுப்பி இருப்பது திமுகவினரை தெளிய தெளிய அடிக்கும் நிலையில் உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News