முடியாத ரெய்டு - வெள்ளைக்கொடியுடன் டெல்லி செல்லும் முதல்வர்!
By : Mohan Raj
தமிழகத்தில் தொடரும் ரைடுகள்! அவசர அவசரமாக டெல்லி விரையும் முதல்வர் ஸ்டாலின்!
தமிழக அரசியலில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரம் பி.டி.ஆரின் முதல் ஆடியோ பதிவை வெளியிட்டு இருந்தார் அண்ணாமலை. அந்த ஆடியோ பதிவில் முதல்வரின் மகன் மற்றும் மருமகனின் சொத்து குவிப்பு பற்றியும் அவர்களின் சொத்து தற்போது முப்பதாயிரம் கோடியாக வளர்ந்து உள்ளது என்று பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் புலம்பியது இடம்பெற்று இருந்தது. இந்த ஆடியோ பதிவை பி டி ஆர் போலியாக சித்தரிக்கப்பட்டது என்று அவர் மறுத்தாலும் இதன் உண்மை தன்மையை பற்றி ஆராய்ந்து விசாரிக்க வேண்டும் என பாஜக தலைமை குழு ஆளுநரிடம் சென்று தங்களது கோரிக்கையை முன்வைத்து வந்ததன் விளைவாக 50 முக்கிய இடங்களில் அதாவது திமுகவினருக்கு நெருக்கமான 50 இடங்களில் வருமான வரித்துறையினர் ரைடு நடத்தினார். இரண்டு நாட்களாக நடைபெறும் இந்த ரைடு முடிவதற்குள்ளேயே பி டி ஆரின் இரண்டாவது ஆடியோ பதிவு வெளியாகி திமுக அரசில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
அந்த இரண்டாவது பதிவிலும் பி டி ஆர் திமுக மற்றும் பாஜகவிற்கு இடையேயான வித்தியாசத்தையும், கட்சிப் பொறுப்பும் மக்களை கவனிக்கும் பொறுப்பும் தனித்தனி மனிதரிடம் இருக்க வேண்டும் என்பதையும் மேலும் முதல்வர், அவரது மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் கையில் தான் கட்சியை உள்ளது மேலும் ஊழலில் வரும் பணத்தை அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள் என்று தமிழக அரசியலின் எரியவிட்ட சம்பவத்தை தொடர்ந்து. தற்போது நடைபெற்று வரும் வருமானவரித்துறையினரின் ரைட்டின் முடிவுகள் வெளிவராத நிலையில் மேலும் அடுத்தடுத்த ரைடுகள் தொடரும் எனவும் அந்த சோதனைகள் எங்கு என்பது யாருக்கும் தெரிவிக்கப்படாது மேலும் ரகசியமாக வைக்கப்படும் எனவும் வருமானவரித் துறையினரிடமிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி தொடர் ரைடுகளால் முதல்வர் ஸ்டாலினின் குடும்பம் மிகுந்த மனக்கஷ்டத்தில் உள்ளது. அதிலும் முதல்வரின் நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் ரெய்டு நடப்பது முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை தவிக்க வைத்துள்ளது. இதன் காரணமாக அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து வரும் முதல்வர் ஸ்டாலின் அவசர அவசரமாக டெல்லி கிளம்பிகிறார்.
அதாவது வருகின்ற ஏப்ரல் 28 மற்றும் 29 போன்ற தேதிகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரு நாள் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். இந்த பயணத்தின் பொழுது குடியரசுத் தலைவர் திரௌபதி மூர்மு'வை ஸ்டாலின் சந்திக்க உள்ளதாகவும், மேலும் அரசியல் ரீதியாக சில தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயத்தில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் அதிமுக பொதுச்செயலாளராக உள்ள பழனிசாமி ஆகிய இருவருமே இன்று டெல்லி சென்றுள்ளார் என்பது. தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை பற்றி குடியரசு தலைவரிடம் ஆளுநர் கலந்தலோசிக்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் முதல்வரும் அடுத்த படியாக குடியரசு தலைவரை சந்திக்க உள்ளாராம் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் பார்ப்பதற்கான நேரத்தையும் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நடக்கும் இது போன்ற ரைடு நடவடிக்கைகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காக முதல்வர் டெல்லி செல்வது கூட்டணி கட்சிகள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரைடு நடந்தால் எதிர் கொள்ள வேண்டியதுதானே எதற்காக டெல்லி விரைய வேண்டும் ? எதற்காக மத்திய அரசிடம் சமாதானம் பேச சொல்ல வேண்டும்? என அதிருப்தியில் உள்ளனர்.