Kathir News
Begin typing your search above and press return to search.

என்ன டெல்லி ப்ளைட் கோளாரா? சகுனம் சரியில்லையே? - புலம்பலில் முதல்வர் தரப்பு!

என்ன டெல்லி ப்ளைட் கோளாரா? சகுனம் சரியில்லையே? - புலம்பலில் முதல்வர் தரப்பு!
X

Mohan RajBy : Mohan Raj

  |  29 April 2023 12:56 AM GMT

டெல்லி கிளம்பிய முதல்வருக்கு ஆரம்பத்திலேயே சகுனம் சரியில்லாமல் போனது அறிவாலய வட்டாரத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

அண்ணாமலை வெளியிட்ட சொத்து விவகாரம் மற்றும் வருமானவரித்துறையினர் ரெய்டு தான் தற்போதைய தமிழக அரசியலை மையமாக சுழன்றடித்து வருகிறது. கடந்த தமிழ் புத்தாண்டு அன்று அண்ணாமலை வெளியிட்ட 1 லட்சம் ரூபாய் கோடி சொத்துக்கள் திமுகதலைவர்களுக்கு சொந்தமாக இருக்கிறது என்ற தகவலை அறிந்ததிலிருந்து திமுக தலைவர்கள் தூக்கம் இன்றி தவிக்கின்றனர். மேலும் அண்ணாமலை சொத்து பட்டியல் அறிவித்ததை தொடர்ந்து அதோடு நிறுத்திக் கொள்ளாமல் சிபிஐ வசம் அந்த ஆவணங்களை ஒப்படைக்க போவதாக கூறி வந்த நிலையில் கூடுதலாக பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை பற்றி பேசியதும், மேலும் முப்பதாயிரம் கோடி ரூபாய் வரை குவித்து வைக்கின்றனர், அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர் என்று கூறிய தகவல்கள் அனைத்தும் எரிமலையாக வெடித்தது.

இருக்கிற பிரச்சினை போதாது என்று இவர் வேற என திமுக மேலிடம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அழைத்து கடிந்து கொள்ளும் அளவிற்கு சென்றது விவகாரம். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வருமான வரித்துறையினர் தமிழகத்தில் குறிப்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமான இடங்கள் உட்பட 50 இடங்களில் வருமான வரி அதிரடி சோதனையில் இறங்கினர்! சரி ஒரு நாளில் சம்பிரதாயமாக சோதனை நடக்கும் என திமுக பேசி வந்த நிலையில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக சோதனை நடந்து கொண்டிருந்தது. என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனவோ? என்ன விவகாரங்களை கேட்டறிந்தனரோ? என்ன தகவல்கள் வருமானவரித்துறையினருக்கு கிடைத்ததோ? என திமுக தலைமை புலம்புவதற்கு காரணமாக அமைந்தது இந்த ரெய்டு.

மேலும் இந்த ரெய்டில் கார் வாங்கியது முதல் குண்டூசி வாங்கியது வரை அனைத்து பில் மற்றும் ரசீதுகள் அனைத்தும் வருமான வரித்துறையினால் கைப்பற்றப்பட்டது எனவும் மேலும் யார் கணக்கிலிருந்து யார் கணக்கிற்கு பணம் சென்றது? யார் கணக்கிலிருந்து யார் கணக்கிற்கு பணம் அனுப்பினார்கள்? யார் யாருக்கெல்லாம் ரொக்கமாகவும் யார் யாருக்கெல்லாம் வங்கியின் மூலம் பணம் பரிமாறப்பட்டது என்ற விவரங்கள் முதற்கொண்டு ஹோட்டலில் எவ்வளவு ரூபாய்க்கு உணவு சாப்பிட்டார்கள் என்கின்ற விவரம் வரை அனைத்தையும் வருமானவரித்துறையினர் நான்கு நாட்களாக அலசி ஆராய்ந்துள்ளனர். இதில் பல முக்கிய தகவல்கள் சிக்கின எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இது மட்டுமல்லாமல் இது முதற்கட்ட ரெய்டு தான் இந்த முதற்கட்ட ரெய்டை வைத்து அடுத்தபடியாக தமிழகத்தில் இதுபோல இன்னும் ஐந்து மடங்கு ரெய்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் வருமான வரித்துறையின் தரப்பிலிருந்து தகவல் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன.

இது மட்டுமல்லாமல் மறுபுறம் அண்ணாமலையோ இதனை நான் சி.பி ஐ ஒப்படைக்க போகிறேன் என்றதும் ஏற்கனவே வருமானவரித்துறையினர் பல இடங்களில் வீடு கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் சிபிஐ வேறு வந்தால் இன்னும் நிலைமை சிக்கலாகிவிடும் என திமுக தரப்பு நன்கு உணர்ந்து விட்டது. அது மட்டுமல்லாமல் பி டி ஆர் பழனிவேலின் தியாகராஜரின் ஆடியோ இரண்டு தான் வெளிவந்திருக்கிறது இன்னும் மூன்று ஆடியோக்கள் இருக்க வாய்ப்பு இருக்கின்றன என்ற தகவலும் கமலாலய வட்டத்திலிருந்து வெளியிடப்பட்டதால் இருக்கிற பிரச்சனை போதாது என இது வேற பிரச்சினையா என இனிமேல் இருந்தால் வேலைக்காகாது நாம் டெல்லி செல்ல வேண்டியது தான் என முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு டெல்லி செல்ல தயாரானார்.

முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு நேற்றிரவு வந்தார். அவர் செல்லவிருந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முதல்வர் சுமார் ஒன்றரை மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க நேரிட்டது. அதனால் முதல்வரின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டு, விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார்.

இதனைத்தொடர்ந்து அதிகாலை 6 மணிக்கு விமானம் மூலம் முதல்வர் டெல்லி சென்றார். இப்படி டெல்லி கிளம்பும்போதே விமானம் கோளாறு ஏற்பட்டுவிட்டதே என முதல்வர் ஸ்டாலின் தரப்பு தற்போது செண்டிமெண்டாக யோசிக்க துவங்கிவிட்டது. மேலும் ஆரம்பமே அபசகுனமாக இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் குடும்பம் இதனை சகுனதடையாக நினைத்து புலம்புவதாக தகவல் கிடைத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News