தொடர் ரெய்டு! சிக்கிய முதல்வர் மருமகன் சபரீசனின் முக்கிய நண்பர்- பரபர தகவல்கள்..
By : Mohan Raj
ரெய்டில் வசமாய் சிக்கிய முதல்வர் மருமகன் சபரீசனின் நெருங்கிய நண்பர் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரங்கள் தொடர்பாக பாஜக தலைமை குழு அதன் உண்மை தன்மையை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநரிடம் வைத்த பிறகு, மறுநாள் அதிகாலையிலேயே வருமான வரித்துறையினர் ஜி ஸ்கொயர் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ரெட்டில் இறங்கினர். இந்நிறுவனம் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ரைடு நடத்துவதற்கு முக்கிய காரணமாக இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் வந்ததாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் அதிக அளவிலான நிலங்களை ஜி ஸ்கொயர் நிறுவனம் கையகப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் கடந்த 2017 முதல் 2020 வரை நஷ்டத்தில் செயல்பட்டதாகவும் அந்த நஷ்டத்திலும் இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறதாகவும் பல கணக்குகள் காட்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது, ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிய முதலீடுகளில் பணம் கிடைத்தது பற்றி விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டதாக சொல்லப்பட்டது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த நிறுவனத்திற்கும் திமுகவிற்கும் தொடர்புகள் உள்ளது என்று பல குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தினார். அதனை அடுத்து சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட 50 இடங்களுக்கு வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினர், மேலும் கர்நாடகா, தெலுங்கானா போன்ற மற்ற மாநிலங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. சென்னையில் நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேத்துப்பட்டு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இதில் சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த ஜி ஸ்கொயர் நிறுவன நிர்வாகியின் வீடு அடங்கும். அவரது வீட்டில் நான்கு நாட்களாக சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவரைத் தொடர்ந்து சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த திமுக எம்எல்ஏவான மோகன் வீட்டிலும் அவரது மகன் கார்த்திக் என்பவரின் அலுவலகத்திலும் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சோதனைகளில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றிருப்பதாகவும் விரைவில் தங்கள் நடத்திய சோதனை பற்றிய முழு விவரத்தையும் அறிக்கையாக வெளியிடுவோம் என்று வருமானவரித்துறையினர் கூறியதாக பல தகவல்கள் பெறப்படுகிறது. இந்த நிலையில் முதல்வரின் மருமகன் சபரீசனின் நெருங்கிய நண்பரான வெங்கட் என்பவரை துருவித் துருவி விசாரித்து வருகின்றனர் வருமானவரித் துறையினர். இவர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் சபரீசன் எங்கு சென்றுள்ளார் என்ன செய்கிறார் இதுவரை யார் யாருக்கெல்லாம் பணம் கொடுத்துள்ளார், யார் யாரிடமிருந்து பணம் பெற்றுள்ளார், அவரின் சொத்துக்கள் எங்கு உள்ளது, ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மூலம் அவர் செய்த ஊழல் பணம் எவ்வளவு, அதன் மூலம் அவர் சம்பாதித்த சொத்து விவரம் எவ்வளவு, எங்கெங்கெல்லாம் சொத்து வாங்கியுள்ளார், அதை யார் யார் பெயரில் எல்லாம் எழுதி வைத்துள்ளார் என வருமானவரித்துறையினர் துருவி துருவி அவரை விசாரணை செய்துள்ளனர். அவர்கள் விசாரித்த விசாரணைகளில் இருந்து பல விவரங்கள் அவர் வருமான வரித்துறையினருக்கு கொடுத்ததாக தெரிகிறது. இந்த தகவலை மூத்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
இந்த விசாரணையின் சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றது வேறு பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது. மேலும் சென்னையில் நடக்கும் நிகழ்ச்சி அரசு ஒன்றிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை அழைக்க சென்றுள்ளார் இதுபோன்ற சம்பிரதாய அழைப்புகளுக்கு குடியரசுத் தலைவரை சம்பிரதாயத்திற்காக சந்திப்பது என்பது போன்றவற்றைக் எல்லாம் நாடாளுமன்ற நிலை குழு தலைவர் டி ஆர் பாலு தான் வழக்கமாக செல்வார் அல்லது திமுகவில் உள்ள எம்பிக்கள் கனிமொழி , ஆர் ராசா, தயாநிதி மாறன் போன்றோர் தான் செல்வார்கள் ஆனால் முதல்வரே இந்த முறை அழைப்பிதழை எடுத்துக்கொண்டு டெல்லி சென்று குடியரசு தலைவரை பார்த்து விட்டு வந்ததும், பிறகு குடியரசுத் தலைவரை பார்த்து விட்டு வந்த வழியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது தற்போது சர்ச்சையை மட்டுமல்ல சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது.