மிஸ்டர் பி.டி.ஆர்! இனி உங்க பிரச்சினையை நீங்க பார்த்துக்கோங்க - பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை கை கழுவிய அறிவாலயம்!
By : Mohan Raj
ஆடியோ டேப் விவகாரத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை திமுக மேலிடம் கைகழுவி விட்டது.
கடந்த தமிழ் புத்தாண்டு அன்று அண்ணாமலை வெளியிட்ட திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை விட நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ தான் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து திமுகவினர் அதிகம் கவலைப்பட்டதாக தெரியவில்லை, ஆனால் திமுக அமைச்சரவையில் இருந்து கொண்டே முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் சொத்துக்களை குவித்து வருகிறார்கள், முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, அவரது மருமகன் சபரீசன் தான் கட்சியே மேலும் உதயநிதியும், சபரீசனும் முப்பதாயிரம் கோடி ரூபாய் பணத்தை குவித்து வைத்துள்ளனர் அதை எங்கு முதலீடு செய்வதென்றே தெரியவில்லை என திமுக அமைச்சரவையில் இருக்கும் சக அமைச்சர் ஒருவரே பத்திரிகையாளர் ஒருவரிடம் கூறுவது திமுகவினருக்கே ஏற்றுக்கொள்ள முடியாத அதிர்ச்சியாக அமைந்தது.
மேலும் பி.டி.ஆர் ஆடியோ வெளியான சமயத்தில் வேறு வருமானவரித்துறை ரெய்டில் இறங்கியதன் பின்னணியில் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ இருக்குமோ என திமுகவினரே பி டி ஆர் மீது சந்தேகப்படும் அளவிற்கு அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்து வந்தன. இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டார் அந்த வீடியோவில், 'நான் கட்சிக்கு என்றும் உண்மையுள்ளவனாக இருந்து வருகிறேன், உதயநிதியை கூட அமைச்சர் பதவியில் அமர்த்த வேண்டும் என நான் தான் முதலில் கூறினேன், அது மட்டுமல்லாமல் சபரிசன் எனக்கு வழிகாட்டி என முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை சமாதானம் செய்யும் அளவிற்கு பிடிஆர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆனால் அந்த வீடியோவில் உள்ள சமாதானத்தை திமுக மேலிடம் ஏற்க வில்லை என்றே தெரிகிறது.
தற்பொழுது திமுக அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக அமைச்சரவை கூட்டத்திற்கு முதல் நாள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனியாக சந்தித்ததும் திமுகவினர் மத்தியில் பேசு பொருளாக மாறியது. இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ சம்பந்தமாக அவரை கை கழுவி விட திமுக முடிவு செய்ததாக தெரிகிறது.
இந்த ஆடியோ விவகாரம் குறித்து பேசி உள்ள திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், 'ஆடியோ விவகாரம் தனிப்பட்ட விவகாரம் என்பதால் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தான் வழக்கு தொடுக்க வேண்டும் திமுக வழக்கு தொடுக்காது' என கைவிரித்துள்ளார். ஆடியோ போலியானது என பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்தான் விளக்கம் கொடுத்துள்ளார். மேற்கொண்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பி டி ஆர் புகார் கொடுக்க வேண்டும்' என திமுக தரப்பில் தெரிவித்ததும் தற்பொழுது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த வார்த்தைகள் மூலமாக டி.கே.எஸ் இளங்கோவன் 'இது பி.டி.ஆர் பிரச்சினை அவர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறியதாகவே பார்க்கப்படுகிறது.
இதுநாள் நாள் வரை பி டி ஆர் பேசிய பேச்சுக்கு திமுக மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதும், பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அந்த ஆடியோவை போலி என அவரே நிரூபித்து விட்டு வரட்டும் எனக் கூறியதும் பி டி ஆர் மீது திமுக மேலிடம் நம்பிக்கை வைக்கவில்லை என்றே தெரிகிறது. மேலும் அந்த ஆடியோவை இப்படி எல்லாம் போலியாக தயாரிக்கலாம் என பி டி ஆர் கூறினாரே தவிர அந்த ஆடியோ டேப்பை அரசு நிறுவனத்திடமோ அல்லது தனியார் நிறுவனத்திடமோ கொடுத்து அதன் உண்மை தன்மையை நிரூபிக்க பி டி ஆர் ஏன் முயற்சிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என திமுக மேலிடம் கை கழுவியதும் தற்பொழுது பி டி ஆர் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக அமைச்சரவை மாற்றத்தில் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறை மாற்றப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.