Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்ஸ்ஸ்ஸ்!!! படுத்தாதீங்கப்பா, அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் புலம்பிய பின்னணி!

ஸ்ஸ்ஸ்ஸ்!!! படுத்தாதீங்கப்பா, அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் புலம்பிய பின்னணி!
X

Mohan RajBy : Mohan Raj

  |  4 May 2023 7:44 AM GMT

திமுக அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் புலம்பியுள்ளார்.

திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து முதல்வர் ஸ்டாலின் அதிகமாக பேசுகிறாரோ இல்லையோ அமைச்சர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பேசுகின்றனர் என புகார்கள் எழுந்து வந்தது. அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, துரைமுருகன், கே.எஸ்.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அமைச்சர் நாசர் இப்படி திமுகவின் மூத்த அமைச்சர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் சர்ச்சையாக பேசிய பல சம்பவங்கள் திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், முதல்வருக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இது மட்டுமல்லாமல் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது, இதனால் திமுகவின் பொதுக்குழு கூட்டத்திலேயே என்னால் தூங்க முடியவில்லை என ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் புலம்பியதும் அதனை தொடர்ந்து திமுக அமைச்சர்கள் அதை கேட்காமல் மீண்டும் பேசி வருவதும் வாடிக்கையாக உள்ளது.

ஏற்கனவே பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரம் மற்றும் திமுக அரசுக்கு 12 வேலை, திருமண மண்டபத்தில் மது அருந்தலாம் என்ற முடிவுகளால் ஏற்பட்ட பின்னடைவுகள் போன்ற தருணங்கள் முதல்வர் ஸ்டாலினை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் திமுகவின் அமைச்சர்கள் சர்ச்சை எழுப்பும் விதமாக பேசுவது வேறு முதல்வரை இன்னும் கவலை கொள்ள செய்துள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி பேசுகையில் 'எவ இவ' என குடிக்க தண்ணீர் இணைப்பு வேணும் என்ற கேட்ட பெண்ணிடம் மரியாதை குறைவாக பேசியதும், வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் துரைமுருகன் ஆயிரம் ரூபாய் தருகிறோம் காலேஜ் படிக்கிற பொண்ணுங்களுக்கு போன் வாங்கி வச்சுக்க! ஜாலியா யாரையாவது கூட்டு படத்துக்கு போ என சொல்லியதும் வேறு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சரவை இலாக்கா மாற்றம், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகள் என இவற்றையெல்லாம் பேசுவதை விட அமைச்சர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றே முதல்வர் ஸ்டாலின் பிரதானமாக பேசியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரில் துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த மாதம் மார்ச் 20ம் தேதி தமிழக சட்டப்பேரவைகள் நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் அதன் தொடர்ந்து மானிய கோரிக்கைகள் மீதான கூட்டம் முடிவடைந்த நிலையில் பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதை செயல்படுத்தும் முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு, புதிய திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்தும், வரும் நாட்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களுடன் வெளிநாடு செல்ல உள்ள நிலையில் அதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது எல்லாவற்றையும் விட அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்களை அதிகமாக வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பொதுவெளியில் கவனத்துடன் பேச வேண்டும் எனவும், மூத்த அமைச்சர்கள் பேசுவது சமூக ஊடகங்களில் பரவுவதை காண முடிகிறது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இப்படி திமுகவின் அமைச்சர்களே ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்து வகையில் மாறி மாறி முதல்வர் என்ன சொன்னால் என்ன நாம் இஷ்டத்திற்கு பேசலாம் என அலட்சியமாக நடந்துகொள்வது முதல்வரை தூங்கவிடாமல் செய்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News