பி.டி.ஆர் ஆடியோவை வைத்து ஆளுநர் ஆடப்போகும் ஆட்டம்!
By : Mohan Raj
பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ மீது ஆளுநர் அதிரடி நடவடிக்கை எடுக்கவிருக்கிறார்.
நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் குடும்பத்தில் மொத்தமாக பணத்தை குவித்து வைத்துள்ளனர், அதிலும் முதல்வரின் மகனும், அமைச்சருமான உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகிய இருவரும் சேர்த்து முப்பதாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை குவித்து வைத்துள்ளனர் எனக் கூறிய ஆடியோ தான் தற்பொழுது திமுகவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்து வருகிறது. இதன் காரணமாக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை மாற்றலாமா என யோசித்து வந்த திமுகவினருக்கு 'தற்பொழுது நிதியமைச்சரை மாற்றினால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நாம் ஒப்புக்கொண்டது போல் ஆகிவிடும் அதுவே மக்கள் மத்தியில் நமக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனவே இப்பொழுது நிதி அமைச்சரை மாற்ற வேண்டாம் இந்த விவகாரத்தை அப்படியே விடுவது தான் சரி' என முதல்வர் ஸ்டாலினின் குடும்ப முடிவு செய்ததால் தியாகராஜன் மாற்றப்படாமல் உள்ளார்.
ஆனால் ஏற்கனவே இந்த இரண்டு ஆடியோக்களும் வெளியான பொழுது பாஜகவின் தலைமை குழு சென்று ஆளுநர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இந்த ஆடியோ குறித்த உண்மையை விசாரிக்க வேண்டும் எனவும், இந்த ஆடியோவில் இருக்கும் தகவலை பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனால் அந்த கோரிக்கை ஆளுநர் வசம் சென்றது. கிட்டத்தட்ட பாஜக கோரிக்கையை விடுத்து பத்து நாட்களுக்கு மேலான நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கில ஊடகத்திற்கு அழைத்த பேட்டி ஒன்றில் இது குறித்து பேசி உள்ளார்.
ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி இது குறித்து கூறும் பொழுது 'இது பற்றி எனக்கு நேரடியாக முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது உரிய விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறேன்' என ஆளுநர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் திமுகவின் அமைச்சர் உதயநிதி வசமிருக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் துணிவு, வாரிசு ஆகிய இரு படங்களின் வெளியீட்டில் அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாகவும், அதனால் முறைகேடு ஏற்பட்டு அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டு நள்ளிரவில் எல்லாம் சிறப்பு காட்சிகள் போடப்பட்டு விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஆளுநரிடம் அளித்த புகார் ஒன்று நிலுவையில் உள்ளது.
அதேபோல் தற்பொழுது திமுக மீது மற்றொரு புகாராக இந்த நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரமும் சென்றுள்ளதால் ஆளுநர் மாளிகையில் இதற்கு உண்டான தகுந்த நடவடிக்கைகளை எடுக்க ஆளுநர்.ஆர்.என்.திட்டமிட்டு வருவதாகவும் ஏற்கனவே திமுக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மோதல் போக்கு கடைபிடித்து வருவதால் இந்த நடவடிக்கைகள் இன்னும் வேகம் எடுக்கும் எனவும் தெரிகிறது.
அப்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் ஏற்கனவே வருமானவரித்துறையினர் இறங்கி அதிரடி ரெய்டு செய்த நிலையில் அடுத்தபடியாக அமலாக்கத்துறை அல்லது சிபிஐ இந்த விவகாரத்தில் களமிறங்கும் எனவும் தகவல்கள் கிடைக்கின்றன.
இது மட்டுமல்லாமல் ஆளுநர் இந்த விவகாரத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறார் எனவும் இப்படி ஆயிரக்கணக்கில் கோடிகளை குவித்து வைப்பது கண்டிப்பாக சிக்கலை உண்டாக்கும் என ஆளுநருக்கு தெரிந்த காரணத்தினாலும் எப்படியாவது இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஆளுநர் வேகம் காட்டி வருகிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாது இந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் குடும்பம் முப்பதாயிரம் கோடி ஆடியோ விவகாரம் குறித்து உண்மையைத் தன்மையை ஆராய்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் அறிக்கை வெளியிட இருப்பதாகவும் தெரிகிறது