Kathir News
Begin typing your search above and press return to search.

ஏதே இதெல்லாம் ஆட்சியா? - விமர்சனங்களால் தடுமாறிய திராவிட மாடல்!

ஏதே இதெல்லாம் ஆட்சியா? - விமர்சனங்களால் தடுமாறிய திராவிட மாடல்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  9 May 2023 7:51 AM IST

2 வருடத்தில் எண்ணற்ற முறை தடுக்கி விழுந்த தி.மு.க.. போதும், போதும் லிஸ்ட் பெருசா போகுது..?

தமிழகத்தில் திமுக இரண்டு ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்து இருக்கிறது. மே 7 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றது. அன்று முதல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் தாங்கள் செய்து முடித்ததாக, குறிப்பாக 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக திமுக பொய்யாக தகவல்களை பரப்பி வருகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக வாக்குறுதிகளாக சுமார் 505 வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் சுமார் 80க்கும் குறைவான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு தங்கள் 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பிரச்சாரம் செய்துவருகிறது திமுக.

இரண்டு ஆண்டு கால ஆட்சியில் திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள் மற்றும் திமுக சந்தித்த சருக்கல்கள் பற்றி பார்க்கலாம் வாங்க. 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தப்படும் என கூறினார்கள். ஆனால் அதன்படி உயர்த்தவில்லை. ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றார்கள் அதையும் செய்து தரவில்லை. அ.தி.மு.க தான் ஏற்கனவே விவசாய கடன்களை ரத்து செய்தது. தி.மு.க. விவசாய கடன்களை ரத்து செய்யவில்லை. விவசாயத்திற்கு முக்கியத்துவம் தராமல் டாஸ்மாக் கடைகளுக்கு முக்கியத்துவம் தந்து அதிக அளவில் புதிய டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கிறது திமுக.

திமுக ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும், வெறும் அறிவிப்புகளோடு நின்றுவிடுகின்றன. ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு தனியார் வேலைவாய்ப்பு வழங்கப்படும், 3 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது. இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேறவில்லை. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், 80 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக அரசு என்று ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கவும், மத்திய அரசுக்கு இணையான ஊதிய வழங்க படும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்களுக்கு தேர்தல் காலத்தில் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது. அது தற்போது வரை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இடப்படும் என்று வாக்குறுதி கொடுத்தது ஆனால் தற்போது வரை அது பற்றி வாயை திறக்கவில்லை. மேலும் கடந்த ஆட்சியின் போது இல்லாத அளவிற்கு மத வெறியும் தமிழகத்தில் அதிகரித்து இருக்கிறது குறிப்பாக கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பயங்கரவாதத்தை அதிகரிப்பதை காட்டி இருக்கிறது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுவதாகக் கூறிய வாக்குறுதியை கொடுத்துவிட்டு தற்பொழுது தகுதி உள்ள குடும்ப தலைவிகளுக்கு மட்டும்தான் என்று மாற்று பேசி விடுகிறது. தமிழகத்தில் முழு கருத்து சுதந்திரம் இருப்பதாக திமுக கூறியிருக்கிறது. ஆனால் திமுகவிற்கு எதிராக யாராவது கருத்து தெரிவித்தால் உடனே அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து விடுகிறது. என சவுக்கு சங்கர் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் புகார் கூறிவருகின்றனர்.

கல்விக் கடன் ரத்து செய்யப்பட வில்லை. பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 மட்டும் குறைத்து தமிழக அரசு கொடுக்கும் என்பதற்கு தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இன்னமும் பாஜக கேள்வி எழுப்பி வருகிறது.

வாக்குறுதியில் மதுபான கடைகள் 500 கடைகளை அடைப்போம் என்று கூறினர். 96 மதுபான கடைகளை அரசு இதுவரை மூடப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் புதிதாக மது கடைகளின் எண்ணிக்கை தான் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி வருகிறார். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில் இன்றளவும் நிறைவேற்றவில்லை.

மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் எனக் கூறிய நிலையில் இன்னும் அமல்படுத்தபடவில்லை ஏன் என அதிமுக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகளில் கூடுதலாக 1 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை திமுக அறிவித்தது. மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தநிலையில் அது பற்றி எதுவும் கூறவில்லை என மீனவ சமுதாய மக்கள் இன்னமும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பாக ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் எனக் கூறி தற்போது ஆவின் பால் விலையை அதிகரித்து இருக்கிறது. சொத்து வரி உயர்வு, பொது பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதுதான் இரண்டு ஆண்டு காலத்தின் மிகப்பெரிய சாதனையாக திமுக செய்து இருக்கிறது இரண்டு ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு மிஞ்சியது வெறும் விலைவாசி உயர்வுகளும், மிகப்பெரிய ஏமாற்றமும் மட்டுமே என பாஜக மாநில செயலாளர் SG சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்த 2 ஆண்டு ஆட்சி குறித்து டிடிவி.தினகரன் கூறுகையில், திமுக ஆட்சி செய்த இந்த 2 ஆண்டுகளும், மக்கள் துயரத்தின் தொடர் ஆண்டுகளாகத்தான் இருந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News