நீங்க மட்டும் மதம் மாறலையா? - கேள்வி கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பளீர் பதிலடி
By : Mohan Raj
தி கேரளா ஸ்டோரி படம் ஏற்படுத்திய தாக்கத்தால் மதம் மாறியது பற்றி மனம் திறந்த குஷ்பூ!
சுதிப்தோ சென் இயக்கி, நடிகைகள் அதாஷர்மா, சித்தி இத்னானி, யோகிதா பிஹானி, சோனியா பாலானி ஆகியோர் நடித்துள்ள படம் தி கேரளா ஸ்டோரி. இந்த படத்தின் டிரைலர் முதலில் ஹிந்தியில் தான் வெளியாச்சு, ஹிந்தில வெளியான சமயத்திலேயே அந்த படத்தின் டிரைலரை பார்த்த கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இந்த படம் அரசுக்கு எதிரான வகையில் உருவாக்கப்பட்ட இருப்பதாகவும், வகுப்புவாத திரைப்படம் போலவும் தெரிகிறது என தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார், அதேபோல இந்த படத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் கடுமையான எதிர்ப்பை தெரிவிச்சாங்க. தி கேரளா ஸ்டோரி பல்வேறு உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம் என குறிப்பிட்டு இருந்தாலும் அதோட ட்ரைலர்ல 32 ஆயிரம் பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறி ஐஎஸ் அமைப்பு இணைந்ததாக குறிப்பிடப்பட்ட இருந்தது பெரும் சர்ச்சை கிளப்பியது. அப்படி கேரளாவின் பல்வேறு அரசியல் கட்சி அமைப்புகளும் இந்த படத்தை வெளியிட கூடாது என டிரைலர் ரிலீஸ் ஆன சமயத்திலேயே கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இந்த படத்தோட ட்ரைலர் வெளியான நிலையில இது கேரளாவின் பன்முகத்தன்மை சீர்குலைக்கும் என கூறப்பட்ட பொழுது கேரளாவின் பன்முகத்தன்மையை எடுத்து உரைக்கும் வகையில் மசூதி ஒன்றுக்குள் இந்து முறைப்படி நடந்த வீடியோ ஒன்னு அதிகளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இந்த வீடியோவை பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்களும் பகிர்ந்து மனிதத்தின் மீதான அன்பு அளவிட முடியாது வழக்கம்போல அவரு ஒரு உருட்டு உருட்டினார்.
இந்த டிரைலர் வெளியான சமயத்துல இந்து தமிழ் நாளிதழ் இந்த படத்தை பற்றி, இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம் என கூறியிருந்தன. இதை கடுமையாக விமர்சித்த தினமணி தி கேரளா ஸ்டோரி வெறுப்பை உமிழும் திரைப்படம் என்றும், இந்து தமிழ் நாளிதழ் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என இத கூறினாலும் கடுகு அளவு நம்பகத்தன்மை சேர்க்கவில்லை என விமர்சித்துள்ளது.
தி கேரளா ஸ்டோரி படம் மோசமான நடிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள மோசமான திரைப்படம் என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழும் கடுமையா விமர்சித்து இருக்கிறது.
மேலும் அந்த படத்துல இன்னும் இருபது ஆண்டுகள்ல கேரளா ஒரு முஸ்லிம் மாநிலமாக மாறும் என துணை முதலமைச்சர் தெரிவித்ததாகவும் கூறப்படுது, இது உண்மை தன்மையை விளக்கும் படம் என்று அவர்கள் கூறப்பட்டிருந்தாலும் அந்த படத்துல சுத்தமா உண்மையே இல்லை என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இப்படி எல்லாம் தரப்பினரும் நாளிதழ்களும் விமர்சிக்கும் வகையில் இருக்கும் இந்த படத்தோட கதை என்ன தான்பா அப்படின்னா, கேரளாவுல வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் நான்கு பெண்கள் நர்சிங் கல்லூரியில் சேர்ந்து அங்கு உள்ள ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறாங்க, அந்த ஹாஸ்டல்ல இவங்க நாலு பேரும் ஒரே ரூம்ல தான் இருக்காங்க. அந்த ரூம்ல அந்த நாலு பேர்ல ஒருத்தரா இருக்க ஆஷிபா எனும் இஸ்லாமிய பெண் மற்ற மூன்று பெண்களையும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றும் வகையில் ஹிஜாப் அணிவதை பற்றியும் அந்த மதத்தில் உள்ள பல அட்வான்டேஜஸ் பத்தியும் கூறி அந்த பெண்களை பிரைன் வாஷ் பண்றாங்க. ஒரு கட்டத்துல இஸ்லாமிய மதத்தில் இருந்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு அப்படின்ற அளவுக்கு அந்த மூணு பொண்ணுங்களும் தள்ளப்படுகிறார்கள். அதனால அந்த மூணு பெண்களும் இஸ்லாமிய மதத்துக்கு மாறிடுறாங்க. அது மட்டும் இல்லாம அந்த படத்துல மேலும் 32 ஆயிரம் பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுவதாகவும் காட்டப்படுகிறது. ஐஎஸ் அமைப்புல இணைந்த பிறகு அவங்க எதிர்கொள்கிற பிரச்சனைகளையும், என்னென்ன கஷ்டங்கள் அவங்க பாக்குறாங்க அப்படின்றது தான் அந்த படத்தின் கதையாக விளக்குகிறது.
இந்த நிலையில தமிழ்நாட்டுல இந்த திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட உள்ளதாக மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்துள்ளன. இந்த படத்தை குறித்து பல சர்ச்சைகள் பல அமைப்பினரிடையே ஏற்பட்ட நிலையில் பல அரசியல் கட்சி அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என போராட்டங்களை தீவிர படுத்தினர். அதைத் தொடர்ந்து இதை வெளியிட பலத்த தடை கோரி தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை கேரளா உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடி செஞ்சனர். இந்த நிலையில மே 7 தேதி இந்த படம் வெளியான நிலையில முதல் காட்சி மட்டுமே வெளியிடப்பட்டது. மற்ற காட்சிகள் எல்லாம் தடை செய்யப்பட்டன. படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்ய ப்படுகின்றன, இனிமேல் திரையரங்கில் இந்த படத்தை வெளியிட மாட்டோம் என மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்துள்ளன.
இந்த படம் தொடர்பான பிரச்சனை வந்த நிலையில், நடிகையும் பாஜக முக்கிய தலைவருமான குஷ்பூ இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியதற்கான காரணம் குறித்த சர்ச்சை கிளம்பியது. சமூக வலைத்தளங்களில் தீவிரமா இயங்கிக்கொண்டு வருபவர் தான் நம்ம குஷ்பூ. சமூக வலைதளங்களில் இவங்க கிட்ட கேட்கப்படும் அரசியல் சார்ந்த பதிவுகளுக்கு மட்டும் பதில் சொல்லாமல், இப்பெல்லாம் தன்னை கேலி செய்பவர்களுக்கு உடனுக்குடனே பதிலடி கொடுக்குறாங்க குஷ்பூ. ரீசண்டா சமூக வலைத்தளங்களில் குஷ்பூ சுந்தர் சியை திருமணம் செய்வதற்காக தான் இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியதாக நிறைய ட்ரோல்களும் மீம்களும் பகிரப்பட்டு அவங்கள கிண்டல் செஞ்சுகிட்டு வந்துட்டு இருக்கு.
இதுக்கெல்லாம் பதில் அளிக்கும் விதமா குஷ்பூ ரீசண்டா ஒரு ட்விட் போட்டு இருக்காங்க அந்த ட்விட்ல, என் திருமணத்தைப் பற்றி கேள்வி கேட்பவர்கள் அல்லது நான் என் கணவரை திருமணம் செய்து கொள்வதற்காக தான் மதம் மாறிவிட்டேன் என கூறுபவர்கள் தயவு செஞ்சு கொஞ்சம் அறிவு வளத்துக்கோங்க எனக் கூறுகிறேன். நம்ம நாட்டுல சிறப்பு திருமண சட்டம் பற்றி அவர்கள் கேள்விப்பட்டதே இல்ல என்பதை நினைக்கும்போது தான் வருத்தமா இருக்கு. நான் மதம் மாறவும் இல்ல அவ்வாறு மதம் மாற என்னை யாரும் வலியுறுத்தவும் இல்லை. எனது 23 வருட திருமண வாழ்க்கை நம்பிக்கை, மரியாதை, சமத்துவம் மற்றும் அன்பின் அடிப்படையில் உறுதியானது. எனவே அதை பத்தி உங்களுக்கு வேற ஏதாவது சந்தேகம் இருந்துச்சுன்னா தயவு செஞ்சு உங்க அறிவை வளர்த்துக்கோங்க அதுதான் உங்களுக்கு தேவை, என தன்னை சமூக வலைதளங்களில் கிண்டல் அடித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ட்விட்டை பதிவிட்டுள்ளார் குஷ்பூ.
இப்படி சமயம் கிடைக்கும்போதெல்லாம் எப்போடா குஷ்பூவ கிண்டல் பண்ணலாம், அரசியல் ரீதியா அவங்களை அவமானப்படுத்தலாம் அப்டின்னு எதிர்பார்த்துட்ருந்தவங்களுக்கு செம்ம பதிலடி கொடுத்துருக்காங்க!