Kathir News
Begin typing your search above and press return to search.

பாட்டிலேர்ந்து, காலி அட்டைப்பெட்டி வரைக்கு ஒரே ஊழல் - ஆளுநரிம் சிக்கிய செந்தில்பாலாஜி!

பாட்டிலேர்ந்து, காலி அட்டைப்பெட்டி வரைக்கு ஒரே ஊழல் - ஆளுநரிம் சிக்கிய செந்தில்பாலாஜி!

Mohan RajBy : Mohan Raj

  |  13 May 2023 5:33 AM GMT

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது ஆளுநரிடம் பறந்த கோரிக்கை

தொடக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக'வில் வட்ட செயலாளர் என்ற பொறுப்பு வகித்தார். பிறகு ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு அடுத்து டிடிவி தினகரனுக்கு ஆதரவாளராகவும் திகழ்ந்து வந்தார். 2018 ல் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி அதிமுக ஆளுங்கட்சியாக இருந்த சமயத்திலும் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்திருந்தார். தற்போது தமிழக மின்சார துறை அமைச்சராக உள்ளார். அதிமுக ஆட்சியில் செந்தில்பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சமயத்தில் ஓட்டுநர், நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர். மேலும் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் பண மோசடி விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர்ந்தது.

இப்படி அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக அமலாக்க துறையிடம் செந்தில் பாலாஜியின் வழக்கு இருந்து வருகின்றது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்றத்திற்காக ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அமலாக்க துறையில் சம்மனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவினர் வழக்கு பதிவு செய்ய கோரிய மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது, அந்த வழக்கில் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை எந்த நேரத்திலும் அவரை விசாரிக்க அழைக்கலாம் என்ற நிலையில் தற்போது இருந்து வருகிறார். இப்படி தன் மீதே விசாரணை இருந்து வருகின்ற சமயத்தில் அண்ணாமலையிடம் ரஃபேல் வாட்சின் விலை பற்றி கேட்க ரஃபேல் வாட்சிங் பில்லுடன் திமுகவின் சொத்து பட்டியலையும் இலவச பரிசாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

இந்த நிலையில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி செந்தில் பாலாஜியை பற்றி ஆளுநரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக அதிக பார்கள் நடைபெற்று வருவதாகவும் அதை மூட வலியுறுத்தி சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வரை சென்று நிறைவு பெற்றது. பிறகு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆளுநரை நேரடியாக சந்தித்து தற்போது மின்சார துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை பதவி நீக்க செய்ய முதல்வருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று தனது மனுவை அளித்துள்ளார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கிருஷ்ணசாமி திராவிட மாடல் என்று பேசும் முதல்வர் தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும், மேலும் தற்போது பல இடங்களில் சட்டவிரோதமான பார்கள் இயங்கப்படுவதாகவும் சில்லறை விற்பனையில் இருந்து காலி அட்டப்பெட்டி வரை ஒரு லட்சம் கோடி ஊழல் நடக்கிறது இது பற்றி விசாரிக்க வேண்டும் மேலும் இந்த ஊழலுக்கு எல்லாம் காரணமாக இருக்கும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க செய்யப்பட வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று தனது கருத்தை ஆளுநரிடம் தெரிவித்தார்.

ஏற்கனவே அமலாக்க துறையின் விசாரணை எப்பொழுது வேண்டுமானாலும் நம்மில் பாயலாம் என்று கவலையுடன் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு தற்போது புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அளித்த மனு கூடுதல் கவலையை அளித்துள்ளதாம். மேலும் கிருஷ்ணசாமி அளித்த மனுவின் படி ஆளுநர் விரைவில் அதிரடி முடிவை எடுப்பார் எனவும் அதன் மூலம் ஆளுநரின் நடவடிக்கை செந்தில் பாலாஜி மீது பாயும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News